புதுச்சேரி கொரோனா பணிகளை மேற்பார்வை செய்ய மத்தியக் குழு வேண்டும்! – கிரண்பேடி போர்க்கொடி

புதுச்சேரி கொரோனா பணிகளை மேற்பார்வை செய்ய மத்தியக் குழு வேண்டும்! – கிரண்பேடி போர்க்கொடி

புதுச்சேரியில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்புப் பணிகளை மேற்பார்வை செய்ய மத்திய அரசு குழு அமைக்க வேண்டும் என்று அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வலியுறுத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி கொரோனா பணிகளை மேற்பார்வை செய்ய மத்தியக் குழு வேண்டும்! – கிரண்பேடி போர்க்கொடி
புதுச்சேரி அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவுக்கும் துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கும் எப்போதுமே மோதல் உண்டு. சுகாதாரத் துறையில் ஆய்வு செய்கிறேன் என்று சென்று மருத்துவர்களை அவதூறாக பேசியதாக கிரண் பேடி மீது குற்றச்சாட்டு உண்டு. மல்லாடி கிருஷ்ணராவ் தொடர்ந்து கிரண் பேடியை விமர்சித்து பேட்டி அளிப்பது வாடிக்கை.
தற்போது புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதற்கு மாநில அரசின் செயல்பாடுதான் காரணம் என்று குற்றம்சாட்டி வருகிறார் கிரண் பேடி.

புதுச்சேரி கொரோனா பணிகளை மேற்பார்வை செய்ய மத்தியக் குழு வேண்டும்! – கிரண்பேடி போர்க்கொடி

இந்த நிலையில் புதுச்சேரி அரசின் கொரோனா தடுப்பு பணிகள் பற்றி கிரண் பேடி வாட்ஸ் அப்-ல் பதிவிட்டுள்ளார். அதில், “புதுச்சேரியில் கொரோனா மேலாண்மைப் பணிகளை மேற்பார்வை செய்ய நிபுணர்கள் குழுவை அமைக்க பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளேன். புதுச்சேரியில் உள்ள மருத்துவ வளங்கள் முழுமையாக பயன்படுத்தப்பட்டதா என்று மதிப்பாய்வு செய்ய இந்த குழுவை அவசரமாக நியமிக்க வேண்டும். ஏனெனில் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.

புதுச்சேரி கொரோனா பணிகளை மேற்பார்வை செய்ய மத்தியக் குழு வேண்டும்! – கிரண்பேடி போர்க்கொடி
இது குறித்து முன்பு முதல்வர் நாராயணசாமிக்கு கடிதம் எழுதியிருந்தேன். மூத்த செயலாளர் அன்பரசுவை நிவாரணம் மற்றும் மறுவாழ்வு ஆணையராக நியமித்து கொரோனா பணிகளை ஒருங்கிணைக்க முதல்வருக்கு ஆலோசனை வழங்கியிருந்தேன்.

புதுச்சேரி கொரோனா பணிகளை மேற்பார்வை செய்ய மத்தியக் குழு வேண்டும்! – கிரண்பேடி போர்க்கொடி

ஆனால் என் ஆலோசனைகளை முதல்வர் நிலுவையில் வைத்துவிட்டார். இந்த கொரோனா காலத்திலும் அவசர விஷயங்களை மறுபரிசீலனை செய்ய முதல்வர் தவறிவிட்டார். இதனால் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். இந்த விவகாரத்தை மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளேன்” என்று கூறியுள்ளார்.