தமிழகத்தில் கோவிட்-19 பாதிப்பு குறித்து மத்தியக் குழுவினர் ஆய்வு!

 

தமிழகத்தில் கோவிட்-19 பாதிப்பு குறித்து மத்தியக் குழுவினர் ஆய்வு!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிக அளவில் பரவி வருகிறது. அதுமட்டுமில்லாமல் உயிரிழப்பின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. அதனால் தமிழகத்தில் உயிரிழப்பை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து தொழில் மற்றும் உள்வர்த்தக மேம்பாட்டுத் துறை இணை செயலர் ராஜேந்திர ரத்னு தலைமையிலான மத்தியக் குழுவினர் தமிழகம் வந்துள்ளனர். அந்த குழு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் 3 நாட்களுக்கு ஆய்வு நடத்த உள்ள நிலையில், இன்று முதல்கட்டமாக சென்னையில் ஆய்வு நடத்தியுள்ளனர்.

தமிழகத்தில் கோவிட்-19 பாதிப்பு குறித்து மத்தியக் குழுவினர் ஆய்வு!

அப்போது பேசிய ராஜேந்திர ரத்னு, தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த மொத்த விவரங்களும் சேகரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்றும் இங்கு இறப்பு விகிதம் குறைவாக இருப்பதால் இந்த நடைமுறையை மற்ற மாநிலங்களில் செய்யபடுத்த ஆலோசனை செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.தமிழகத்தில் இருக்கும் குறைகளை கண்டுபிடிக்க இந்த குழு இங்கு வரவில்லை.. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த விவரங்களை 3 நாட்களுக்குள் ஆய்வு செய்து மத்திய அரசிடம் ஒப்படைக்க தான் இந்த குழு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.