“தேவேந்திர குல வேளாளர்கள் எஸ்சி வகுப்பிலிருந்து விரைவில் வெளியேற்றப்படுவார்கள்”

“தேவேந்திர குல வேளாளர்கள் எஸ்சி வகுப்பிலிருந்து விரைவில் வெளியேற்றப்படுவார்கள்”

“தமிழகத்தில் பட்டியலினத்திலுள்ள தேவேந்திர குலத்தார், கடையர், காலாடி, குடும்பர், பள்ளர், பன்னாடி, வாதிரியார் ஆகிய ஏழு உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று பொதுப்பெயராக அறிவிக்க வேண்டும்; மேலும் அவர்களை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் (SC to BC) இணைத்து 6 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்பதே புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ண்சாமி உள்ளிட்டோரின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது.

“தேவேந்திர குல வேளாளர்கள் எஸ்சி வகுப்பிலிருந்து விரைவில் வெளியேற்றப்படுவார்கள்”

இச்சூழலில் மேற்கூறிய 7 உட்பிரிவுகளைச் சேர்த்து தேவேந்திர வேளாளர் என அழைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரைத்தது. இதையடுத்து, இதற்கான சட்டத்திருத்த மசோதாவை, மக்களவையில் சமூக நீதித்துறை இணை அமைச்சர் கிருஷ்ணபால் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடியும் இதுகுறித்துப் பேசியிருந்தார். ஆனால், விரைவில் தேவேந்திர குல வேளாளர்கள் பட்டியலினத்திலிருந்து வெளியேற்றப்பட்டு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இணைக்கப்படுவார்கள் என்று பிரதமர் கூறியதாக ஒரு தகவல் ஊடகங்களில் வெளியானது.

“தேவேந்திர குல வேளாளர்கள் எஸ்சி வகுப்பிலிருந்து விரைவில் வெளியேற்றப்படுவார்கள்”

தற்போது அந்தச் செய்திகள் முழுவதும் தவறானவை என்று மத்திய சமூக நீதி அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், “இதுதொடர்பாக வெளியான செய்திகள் மக்களிடம் தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. பட்டியலினத்திலிருக்கும் குறிப்பிட்ட அந்த 7 உட்பிரிவு சாதிகளைச் சேர்ந்தவர்கள் தேவேந்திரகுல வேளாளர்களாக வகைப்படுத்துவதற்கு மட்டுமே மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

“தேவேந்திர குல வேளாளர்கள் எஸ்சி வகுப்பிலிருந்து விரைவில் வெளியேற்றப்படுவார்கள்”

அவர்கள் பட்டியலினத்திலிருந்து நீக்கப்பட்டு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் மாற்றப்படுவதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. ஆகவே தமிழ்நாட்டின் பட்டியலினங்களில் ஒன்றாக தேவேந்திர குல வேளாளர் நீடிக்கும். இதுதொடர்பான மசோதாவே மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. யாரும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம்; பரப்ப வேண்டாம்” என கேட்டுக்கொண்டுள்ளது.

“தேவேந்திர குல வேளாளர்கள் எஸ்சி வகுப்பிலிருந்து விரைவில் வெளியேற்றப்படுவார்கள்”

இதன்மூலம் தேவேந்திர குல வேளாளர் என்று பொதுப்பெயர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது; பட்டியலினத்திலிருந்து வெளியேற்றப்படவில்லை என்பது தெளிவாகிறது. தேவேந்திர குல வேளாளர் என பொதுப்பெயர் மாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுவது, அரைக் கிணறைத் தாண்டுவது போன்ற செயல் என்று கிருஷ்ணசாமி ஏற்கனவே குற்றஞ்சாட்டியிருந்தது கவனிக்கத்தக்கது.