வரி சேமிக்க முதலீடுகள் செய்வதற்கான காலக்கெடு அடுத்த மாதம் 31ம் தேதி வரை நீட்டிப்பு…. மத்திய நேரடி வரிகள் வாரியம்

வரி சேமிக்க முதலீடுகள் செய்வதற்கான காலக்கெடு அடுத்த மாதம் 31ம் தேதி வரை நீட்டிப்பு…. மத்திய நேரடி வரிகள் வாரியம்

மக்கள் அனைவரிடமும் சேமிப்பு பழக்கம் உள்ளது. இருப்பினும் வருமான வரியை குறைக்கும் நோக்கில் தங்களது வருவாயை பல திட்டங்களில் முதலீடு செய்கின்றன. உதாரணமாக வரி சேமிப்பு பத்திரங்கள் போன்றவற்றில் பணத்தை முதலீடு செய்வதன் வாயிலாக வரி செலுத்துவதை குறைத்து கொள்ளலாம். பொதுவாக ஆண்டு இறுதியில் இது போன்ற சேமிப்பு திட்டங்களில் தங்களது பணத்தை முதலீடு செய்து அதனை தங்களது வருமான வரி கணக்கில் காட்டி வரியை செலுத்துவதை குறைத்து கொள்வார்கள்.

வரி சேமிக்க முதலீடுகள் செய்வதற்கான காலக்கெடு அடுத்த மாதம் 31ம் தேதி வரை நீட்டிப்பு…. மத்திய நேரடி வரிகள் வாரியம்

பிரிவு 80 சி(எல்.ஐ.சி.,பிபிஎப், என்எஸ்சி போன்றவை), 80டி (மெடிகிளைம்), 80ஜி (நன்கொடைகள்) போன்றவற்றை உள்ளடக்கிய வருமான வரி சட்டத்தின் அத்தியாத்தின்கீழ், வரிவிலக்கு கோர பல்வேறு வரி சேமிப்பு முதலீடுகள் மற்றும் செலவினங்களை மேற்கொள்வதற்கான காலஅவகாசத்தை ஜூலை 31ம் தேதி வரை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்துள்ளது.

வரி சேமிக்க முதலீடுகள் செய்வதற்கான காலக்கெடு அடுத்த மாதம் 31ம் தேதி வரை நீட்டிப்பு…. மத்திய நேரடி வரிகள் வாரியம்

இதுதவிர 2018-19ம் நிதியாண்டுக்கான திருத்த வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலஅவகாசத்தை அடுத்த மாதம் 31ம் தேதி வரை நீட்டித்துள்ளது. கடந்த நிதியாண்டுக்கான (2019-20) வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலஅவகாசத்தையும் இந்த ஆண்டு நவம்பர் 30ம் தேதி வரை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்துள்ளது.