மருத்துவ உள் இடஒதுக்கீட்டை எதிர்க்கும் மத்திய பாஜக அரசு – தமிழக பாஜக நிலை என்ன?

 

மருத்துவ உள் இடஒதுக்கீட்டை எதிர்க்கும் மத்திய பாஜக அரசு – தமிழக பாஜக நிலை என்ன?

இந்தியா முழுமைக்கும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வு நீட் தேர்வைக் கொண்டு வந்தது மத்திய அரசு. இது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும்போது கொண்டுவரப்பட்டாலும் சில மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், பாஜக கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து மாநிலங்களிலும் கட்டாயமாக நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

நீதிமன்றங்களுக்கு சென்றும் விலக்குக் கிடைக்கவில்லை. எனவே தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வு என்பது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பை எட்டாக்கனியாக மாற்றிவிடும் என எதிர்க்கட்சிகளும் கல்வியாளர்களும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்கள்.

மருத்துவ உள் இடஒதுக்கீட்டை எதிர்க்கும் மத்திய பாஜக அரசு – தமிழக பாஜக நிலை என்ன?

இதற்கு ஒரு தீர்வாக தமிழ்நாடு அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டுவந்தது தமிழக அரசு. புதுச்சேரியில் 10 சதவீத இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தது புதுச்சேரி அரசு.

அரசு பள்ளி மாணவர்களை கொண்டு வந்த நிலையில் இந்த சட்டங்களுக்கு மத்திய அரசு இன்னும் அனுமதி அளிக்கவில்லை. இதற்கு அனுமதி அளிக்கும்படி புதுச்சேரி மாணவி ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு விசாரணை இன்று வந்தது. அதில் மத்திய அரசின் சார்பாக வாதாடிய வழக்கறிஞர், நீட் தேர்வு என்பது ஒரே நாடு ஒரே தேர்வு எனும் அடிப்படையில் கொண்டு வரப்பட்டது. அதில் உள் இட ஒதுக்கீடு என்பது நீட் தேர்வு கொண்டு வந்திருக்கும் தகுதியை சீர்குலைத்து விடும் என்று வாதிட்டார். மேலும் இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்திருப்பது மத்திய அரசின் கவனத்திற்கு இன்னும் வரவில்லை என்றும் தெரிவித்திருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

மருத்துவ உள் இடஒதுக்கீட்டை எதிர்க்கும் மத்திய பாஜக அரசு – தமிழக பாஜக நிலை என்ன?

7.5 சதவீத இட ஒதுக்கீடு இங்கே கொண்டுவரப்பட்டபோது தமிழ்நாடு பாஜகவினர் வரவேற்று அறிக்கை வெளியிட்டிருந்தனர் பாஜக தமிழகத்தில் வரும்போது தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், துணைத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்று அறிக்கை விட்டனர். உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக பாஜக கல்வி பிரிவு தலைவர் நந்தகுமார் கருத்து சொன்னபோது, எல்.முருகன் அதை மறுத்து ‘நந்தகுமார் கருத்துக்கும் பாஜகவுக்கும் தொடர்பு இல்லை’ என்று தெரிவித்தார்.

இந்நிலையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு மருத்துவ படிப்புக்கான உள்இட ஒதுக்கீட்டுக்கு எதிராக நீதிமன்றத்தில் வாதாடி வருகிறது. உண்மையில் தமிழக பாஜகவின் நிலை என்ன இந்த விஷயத்தில் என்பதை தெரிந்து கொள்ளத்தான் பலரும் ஆவலாக இருக்கிறார்கள்.