நம்பிக்கை கொடுத்த பொதுத்துறை வங்கி… சென்ட்ரல் பேங்க் இந்தியா லாபம் ரூ.147 கோடியாக உயர்ந்தது…

நம்பிக்கை கொடுத்த பொதுத்துறை வங்கி… சென்ட்ரல் பேங்க் இந்தியா லாபம் ரூ.147 கோடியாக உயர்ந்தது…

பொதுத்துறையை சேர்ந்த சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.147.21 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 21 சதவீதம் அதிகமாகும் 2019 ஜூன் காலாண்டில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா நிகர லாபமாக ரூ.121.61 கோடி ஈட்டியிருந்தது.

நம்பிக்கை கொடுத்த பொதுத்துறை வங்கி… சென்ட்ரல் பேங்க் இந்தியா லாபம் ரூ.147 கோடியாக உயர்ந்தது…

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா 2020 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் மொத்த வருவாயாக ரூ.6,751.86 கோடி ஈட்டியுள்ளது. 2019 ஜூன் காலாண்டில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் மொத்த வருவாய் ரூ.6,518.37 கோடியாக இருந்தது. 2020 ஜூன் காலாணடில் தனிப்பட்ட முறையில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா நிகர லாபம் ரூ.135.43 கோடியாகவும், வருவாய் ரூ.6,726.68 கோடியாகவும் இருந்தது.

நம்பிக்கை கொடுத்த பொதுத்துறை வங்கி… சென்ட்ரல் பேங்க் இந்தியா லாபம் ரூ.147 கோடியாக உயர்ந்தது…

2020 ஜூன் 30ம் தேதி நிலவரப்படி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் மொத்த வாராக்கடன் 19.93 சதவீதத்திலிருந்து 18.10 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 7.98 சதவீதத்திலிருந்து 6.76 சதவீதமாகவும் குறைந்துள்ளது. இது மோசமான கடன்களுக்கான ஒதுக்கீட்டை குறைக்க உதவியது.