ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓபிஎஸ்க்கு வழங்கப்பட்ட அந்தஸ்து நீக்கம்!  | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    19
    Wednesday

Main Area

Mainஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓபிஎஸ்க்கு வழங்கப்பட்ட அந்தஸ்து நீக்கம்! 

OPS
OPS

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிரிவு பாதுகாப்பு நாளையில் இருந்து விலக்கிக் கொள்ளப்படுவதாக சிஆர்பிஎப் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பு பிரிவுகள் இசட், இசட் ப்ளஸ், ஒய் மற்றும் எக்ஸ் என்று நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, சபாநாயகர், துணை சபாநாயகர், பிரதமர் மற்றும் நாட்டில் முக்கியத்துறைகளில் இருக்கக்கூடியவர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கக்கூடியது. தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுவருகிறது.

ஸ்டாலின்

இந்நிலையில் மத்திய அரசின் இசட் பிரிவு பாதுகாப்புப் பட்டியலில் இருந்து பன்னீர்செல்வம், ஸ்டாலினின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஓபிஎஸ்க்கும், ஸ்டாலினுக்கும் கொடுக்கப்பட்ட பாதுகாப்பு நாளை முதல் வாபஸ் பெறப்படுகிறது. 

2018 TopTamilNews. All rights reserved.