• December
    10
    Tuesday

Main Area

Main



பிரபல வில்லன் நூற்றாண்டு விழாவில் கைக்கோர்க்கும் கமல் மற்றும் ரஜினி! 

ரஜினிகாந்த் மற்றும் கமல்
ரஜினிகாந்த் மற்றும் கமல்

பிரபல நடிகர் நம்பியாரின் நூற்றாண்டு விழா வருகிற 19 ஆம் தேதி சென்னை மியூசிக் அகடாமியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

தமிழ் பட உலகில் புகழ் பெற்ற வில்லன் நடிகராகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்துவந்தவர் நம்பியார். 60 ஆண்டு திரையுலக வாழ்க்கையில் 1000 படங்களுக்கு மேல் நடித்த இவர், கடந்த 2008ல் தனது 89வது வயதில் மரணம் அடைந்தார். 

நம்பியார்

இந்நிலையில் நம்பியாரின் வாழ்க்கை, அவர் நடித்த திரைப்படங்கள் மற்றும் ஆன்மிக ஈடுபாடு உள்ளிட்டவற்றை தொகுத்து நம்பியார் வாழ்க்கை 30 நிமிட ஆவண படமாக தயாராகி உள்ளது. இந்த படத்தை கவுதம் மேனன் உதவியாளர் சூர்யா இயக்கி உள்ளார். நம்பியாரின் நூற்றாண்டு விழா நிகழ்வு வரும் 19ஆம் தேதி சென்னை மியூசிக் அகடமியில் நடக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், சிவகுமார் ஆகியோரருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இந்த விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா, நம்பியார் மகன் மோகன் நம்பியார், பேரன் சித்தார்த் நம்பியார் உள்ளிட்ட பலர் பங்கேற்வுள்ளனர்.

2018 TopTamilNews. All rights reserved.