மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய மக்கள் தொகை பதிவேடு பணிகள் இந்த ஆண்டு நடைபெற வாய்ப்பில்லை..

 

மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய மக்கள் தொகை பதிவேடு பணிகள் இந்த ஆண்டு நடைபெற வாய்ப்பில்லை..

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு அப்டேட் பணிகள் இந்த ஆண்டு நடைபெற வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

வழக்கமாக குடியிருக்கும் குடிமக்களிடம் இருந்து அவர்களது குறித்து தகவல்களை திரட்டுவதுதான் என்.பி.ஆர். எனப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேடு. மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 (முதல் கட்டம்) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு அப்டேட் பணிகள் கடந்த ஏப்ரல் மாதத்தில் தொடங்கி செப்டம்பர் 30ம் தேதி வரை நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழ்நிலையில், கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவ தீவிரவமாக பரவ தொடங்கியதால் அந்த பணிகள் நடைபெறவில்லை.

மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய மக்கள் தொகை பதிவேடு பணிகள் இந்த ஆண்டு நடைபெற வாய்ப்பில்லை..
தேசிய மக்கள் தொகை பதிவேடு

இந்நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் மக்கள் தொகை பதிவேடு பணிகள் இந்த ஆண்டு நடைபெற வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் லட்சக்கணக்கான பணியாளர்கள் ஒவ்வொரு வீடாக சென்று தகவல்களை சேகரிப்பார்கள். தற்போதைய கொரோனா வைரஸ் பரவல் சூழ்நிலையில் அவர்கள் இந்த பணியை மேற்கொண்டால் அது அவர்களுக்கு உடல் நலத்துக்கு ஆபத்தாக முடியும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய மக்கள் தொகை பதிவேடு பணிகள் இந்த ஆண்டு நடைபெற வாய்ப்பில்லை..
கணக்கெடுப்பு பணிகள்

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 (முதல் கட்டம்) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு மேம்படுத்துதல் நடவடிக்கை குறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தற்போது மிகவும் முக்கியமானது அல்ல. ஒரு ஆண்டு கழித்து கூட நடத்தி கொள்ளலாம் அதனால் பாதிப்பு இல்லை. இந்த பணிகள் எப்போது நடைபெறும் என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. ஆனால் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அந்த பணிகள் இந்த ஆண்டு நடைபெறாது என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது என தெரிவித்தார்.