ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ.520 ஆக உயர்வு : அதிகரித்த கட்டுமான பொருட்களின் விலை!

ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ.520 ஆக உயர்வு : அதிகரித்த கட்டுமான பொருட்களின் விலை!

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கட்டுமான பொருட்களின் விலை 40% வரை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். அத்துடன் 70% கட்டுமான பணிகள் பொதுமக்கள் தேக்கமடைந்துள்ளன. கட்டுமானப் பணிகளுக்கு அழைத்து வரப்பட்டு பணி செய்து வரும் வட மாநில தொழிலாளர்கள் பொதுமக்கள் காரணமாக சொந்த ஊர் சென்றுள்ளதால் வேலையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ.520 ஆக உயர்வு : அதிகரித்த கட்டுமான பொருட்களின் விலை!

இந்நிலையில் ரூ.370 ஆக இருந்த ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ.520 ஆக உயர்ந்துள்ளது. ஒரு டன் ஸ்டீல் கம்பி ரூ.68,000 ரூபாயிலிருந்து ரூ.75,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. ரூ.3800ஆக இருந்த ஒரு யூனிட் மணல் தற்போது ரூ.5200 ஆக உயர்ந்துள்ளது. ஜல்லி ஒரு யூனிட் 3,500 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கட்டுமான பொருட்களின் விலை 20% முதல் 30% வரை உயர்ந்துள்ளது.

ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ.520 ஆக உயர்வு : அதிகரித்த கட்டுமான பொருட்களின் விலை!

எலட்ரிக் பொருட்களின் விலை 30% வரை உயர்ந்துள்ளதாக கட்டுமான பொறியாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழக அரசு விலை நிர்ணயக்குழுவை அமைக்க வேண்டும் என கட்டுமான பொறியாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. குறிப்பாக கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கட்டுமான பொருட்களின் விலை 40% வரை அதிகரித்துள்ளது.