போன் ரீசார்ச் பண்ண இனி சொத்தை விற்க வேண்டி வருமா?

 

போன் ரீசார்ச் பண்ண இனி சொத்தை விற்க வேண்டி வருமா?

அன்றாட செலவுகளில் தொலைபேசி ஸ்மார்ட்போன்களுக்கான ரீச்சார்ஜ் செலவும் அத்தியாவசியமானதாக உருவாகி உள்ளது. சாதாரணமாக ஒரு வீட்டில் இரண்டு முதல் நான்கு ஐந்து போன்கள் வரை பயன்பாட்டில் உள்ளன. ஒரே போனில் 2 சிம் கார்டுகள் பொருத்தி பயன்படுத்துவதும் சாதாரண நடைமுறை ஆகிவிட்டது. அந்த வகையில் பார்த்தால், ஒருவருடைய மாத பட்ஜெட்டில் , தோராயமாக 500 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்யப்படுகின்றன. இதுவே கணவன்,மனைவி,அப்பா, அம்மா என நான்கு போன்கள் கொண்ட வீடு என்றால் தோராயமாக மாதம் 2 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்யப்படுவது வழக்கமாக உள்ளது.

போன் ரீசார்ச் பண்ண இனி சொத்தை விற்க வேண்டி வருமா?

இவ்வளவு செலவு செய்தும் டேட்டா காலியாகிவிடும், மாதக்கடைசியில் டேட்டாவுக்கு என தனி ரீசார்ஜ் செய்யப்படுவதும் உண்டு.ஆனால் இந்த வருமானங்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களை நடத்துவதற்கு போதவில்லையாம்.தற்போது பல நிறுவனங்கள் தொலைபேசி கட்டணங்களை உயர்த்த வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றன. ஏர்டெல் நிறுவனம் இதுதொடர்பாக தொலைத் தொடர்புக்கு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. கட்டணங்களை உயர்த்த வேண்டும் என சொல்லி வருகிறது. இந்தியாவில் மட்டும் தான் டேட்டா கட்டணம் பத்து ரூபாய்க்கு ஒரு ஜிபி என்று அளிக்கப்படுகிறது .இது இலவசமாக அளிப்பது போல உள்ளது என்று கூறியுள்ளார் அந்த நிறுவனத்தின் தலைவர் சுனில் பார்தி மிட்டல்.

போன் ரீசார்ச் பண்ண இனி சொத்தை விற்க வேண்டி வருமா?

தொலைத் தொடர்புத்துறையில் ஏகபோகமாக இருந்த நிறுவனங்களை ரிலையன்ஸ் ஜியோ வந்து காலி செய்தது. பல நிறுவனங்கள் டேட்டா கட்டணங்களை அதிகமாக வைத்த நிலையில், ரிலையன்ஸ் ஜியோ குறைந்த கட்டணத்தில் அறிமுகமானது. ஆனால் வாடிக்கையாளர்களை அதிகரித்த பின்னர், ரிலையன்ஸ் ஜியோ வின் கட்டணங்களும் தற்போது மற்ற நிறுவனங்களின் கட்டண வரம்பு போல உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

போன் ரீசார்ச் பண்ண இனி சொத்தை விற்க வேண்டி வருமா?

இந்த நிலையில், தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சித் தரும் விஷயமாக, வரும் ஆண்டில் தொலைபேசி கட்டணங்கள் உயரும் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறுவனங்களின் நஷ்டம், அலைக்கற்றை விலை அதிகமாக இருப்பது , அதிகரித்துவரும் செலவினங்கள் காரணமாக தொலைபேசி கட்டணங்களை, டேட்டா கட்டணங்களை உயர்த்த வேண்டும் என நிறுவனங்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.தற்போது வரை இதற்கான முடிவு எடுக்கப்படவில்லை என்றும், வரும் ஆண்டில் விலை உயர வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது .

போன் ரீசார்ச் பண்ண இனி சொத்தை விற்க வேண்டி வருமா?

இந்த விலையேற்றம் முதலில் வோடபோன்- ஐடியா நிறுவனத்தில் இருக்கும் என தெரிகிறது. அதன்பின்னர் ஏர்டெல் ,அதற்கடுத்து ரிலையன்ஸ் ஜியோ என விலை ஏறுவதற்கு வாய்ப்புள்ளது. தற்போது இந்த நிறுவனங்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருவதால், உறுதியாக தொலைபேசி கட்டணங்கள் விலை ஏறும் என நம்பப்படுகிறது. இதனால் தொலைபேசி வாடிக்கையாளர்கள் அடுத்த ஆண்டிலிருந்து தங்கள் பட்ஜெட்டில் கொஞ்சம் கூடுதலாகவே செலவு செய்ய வேண்டியிருக்கும் என நம்பலாம .5ஜி சேவை அறிமுகம் ஆகும் நிலையில், டேட்டா இல்லாமல் எதுவும் இல்லை என மாறிவிடும் . இதனால் கட்டணங்கள் உயர்ந்தாலும், தவிர்க்க முடியாத செலவாக இருக்கும். 4ஜி க்கே இப்படி என்றால் 5ஜி சேவை வந்தால் எவ்வளவு கட்டணம் வசூலிக்க போகிறார்களோ தெரியவில்லை.!