ஓயாம செல்போன் பேசுறவங்க மீது நோய்கள் பாயாமலிருக்க , இனி இப்படி யூஸ் பண்ணுங்க

 

ஓயாம செல்போன் பேசுறவங்க மீது நோய்கள் பாயாமலிருக்க , இனி இப்படி யூஸ் பண்ணுங்க

இன்றைய இளம் தலைமுறைகளின் உடலில் ஓர் முக்கிய அங்கமாக மாறி விட்டது செல்போன். 80 சதவீத இன்றைய இளைய தலைமுறையினர் இரவு நேர நீண்ட பேச்சு, மறைந்து இருந்து பேசுவது, பாலியல் படங்களை வைத்திருப்பது போன்ற செயலில் ஈடுபடுகின்றனர். அணுகுண்டை நல்வழியில் பயன்படுத்தவே கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதனை தீய வழிகளுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். அதே போல் செல்போனும் தவறான வழிக்கு பயன்படுத்தப்படுகிறது. செல்போனில் தொடர்ந்து விளையாடுவதால் இளைஞர்களுக்கு பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றன. கழுத்து வலி, மனநோய், முதுகுவலி, கண்பார்வை கோளாறு ஏற்படுகிறது. ஆகவே செல்போனை தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்.

செல்போன்களை எப்படி கையாள வேண்டும் என்பதை தெரிந்து கொண்டாலே பல பாதிப்புகளை குறைந்தபட்சம் தவிர்க்கலாம்.குழந்தைகள் பெரியவர்களைவிட செல்போன்களை மிக எளிதாக பயன்படுத்துவதை பார்த்து பெருமை கொள்ளும் பெற்றோர்கள் நிச்சயம் ஒரு முக்கியமான விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், செல்போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு வெகு அதிகமாக குழந்தைகளை பாதிக்கும்

ஓயாம செல்போன் பேசுறவங்க மீது நோய்கள் பாயாமலிருக்க , இனி இப்படி யூஸ் பண்ணுங்க

சில கிராமப்புற பகுதிகளில் சரியாக நெட்வொர்க் கிடைப்பதில்லை. இது போன்று சரியாக சிக்னல் கிடைக்காத பகுதிகளில் செல்போன் பயன்படுத்தும் போது, கதிர்வீச்சின் பாதிப்பு அதிகம் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது

தூங்கும் போது செல்போனை பக்கத்திலேயே வைத்து கொண்டு தூங்குபவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். இந்த பழக்கத்தினை ஆரம்ப காலத்திலேயே தவிர்த்து கொள்வது சரியான ஒன்று.

மற்றவர்களுக்கு பேசும் போது, எதிர் முனையில் பேசுபவர்கள் அழைப்பை எடுத்த பின், காதில் வைத்து பேசுவது நல்லது. ஏனெனில் பேசும் போது ஏற்படும் கதிர்வீச்சைவிட, ரிங்டோன் போகும் பொழுது 14 மடங்கு அதிகம் கதிரவீச்சுகள் வெளிப்படுகிறது.

முக்கியமாக வைப்ரேட் மோடில் செல்போனை வைத்திருப்பதை தவிர்க்கவும். இது போன்று வைப்ரேட் மோடில் வைத்து, சட்டை பாக்கெட்டில் வைத்திருப்பதால் இதன் மூலம் ஏற்படும் அதிர்வலைகள் அதிகம் தாக்குகின்றன.

பொதுவாக வலது காதில் வைத்து மொபைல் பேசும் போது மூளை நேரடியாக பாதிக்கும். இதனால் இடது பக்க காதில் வைத்து பேசினால் இதன் பாதிப்பை குறைக்கலாம்.

பயணங்களில் பொழுதுபோக்காக நிறைய பேர் கேம்கள் விளையாடுவது வழக்கம். இப்படி பயணங்களில் உற்றுபார்த்து ஒரு வேலையை செய்வதன் மூலம் கண்கள் எளிதாக பாதிக்கப்படும்.

இப்படி விளையாட்டாகவும், கவன குறைவாகவும் செய்யும் சில வேலைகளை குறைத்தாலே செல்போன்கள் மூலம் ஏற்படும் பெரிய பாதிப்புகளை ஓரளவு குறைக்க முடியும்.