ஓட்டுநரை தாக்கி பல கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை

 

ஓட்டுநரை தாக்கி பல கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை

கிருஷ்ணகிரி அருகே லாரியில் மும்பைக்கு கொண்டுசெல்லப்பட்ட பலகோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்களை, ஓட்டுநர்களை தாக்கிவிட்டு மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பூந்தமல்லியில் இருந்து மும்பைக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வழியாக சென்றுள்ளது.

ஓட்டுநரை தாக்கி பல கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை

இன்று அதிகாலை நாலரை மணியளவில் தேசிய நெடுஞ்சாலை மேலுமலை பகுதியில் சென்றபோது, மூன்று லாரிகளில் வந்த மர்மநபர்கள், பார்சல் லாரியை வழிமறித்துள்ளனர். பின்னர், அதில் இருந்த 2 ஓட்டுநர்களையும் கண்ணைக்கட்டி காட்டிற்கு அழைத்துச்சென்ற அந்த கும்பல், இருவரையும் கை, கால்களை கட்டிவைத்துவிட்டு லாரியை எடுத்துகொண்டு தப்பியுள்ளனர். இதுகுறித்து லாரி ஓட்டுநர்கள் உடனடியாக சூளகிரி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் தீவிர சோதனையில் ஈடுபட்ட சூளகிரி போலீசார், சூளகிரி அளுகுபாவி அருகே சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியை பறிமுதல் செய்தனர். போலீசாரின் விசாரணையில் கடத்தல்காரர்கள் செல்போன்களை கொள்ளையடித்துவிட்டு, லாரியை சாலையோரத்தில் நிறுத்திச்சென்றது தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக 2 டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓட்டுநரை தாக்கி பல கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை