பிரபல ஹாலிவுட் நடிகர் ‘கறுப்பின மக்கள் சினிமாவின் பிதாமகன்’மெல்வின் வான் பீபிள்ஸ் மறைவு -ரசிகர்கள் இரங்கல்

பிரபல ஹாலிவுட் நடிகர் ‘கறுப்பின மக்கள் சினிமாவின் பிதாமகன்’மெல்வின் வான் பீபிள்ஸ் மறைவு -ரசிகர்கள் இரங்கல்

கறுப்பின மக்கள் சினிமாவின் பிதாமகன் என்று அழைக்கப்படும் பிரபல ஹாலிவுட் இயக்குநர் மெல்வின் வான் பீபிள்ஸ்(89) மறைந்தார். அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல ஹாலிவுட் நடிகர் ‘கறுப்பின மக்கள் சினிமாவின் பிதாமகன்’மெல்வின் வான் பீபிள்ஸ் மறைவு -ரசிகர்கள் இரங்கல்

நடிகர், எழுத்தாளர், பத்திரிகையாளர், நாடக ஆசிரியர், திரைப்பட இயக்குனர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்டவர் மெல்வின் வான் பீபிள்ஸ். கறுப்பின மக்கள் சினிமாவின் பிதாமகன் என்று போற்றப்படும் இவர் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் மான்ஹாட்டன் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று முன் தினம் காலமானார்.

பிரபல ஹாலிவுட் நடிகர் ‘கறுப்பின மக்கள் சினிமாவின் பிதாமகன்’மெல்வின் வான் பீபிள்ஸ் மறைவு -ரசிகர்கள் இரங்கல்

The Big Heart என்ற நாவலின் மூலமாக 1957ல் கலைத்துறைக்கு அறிமுகமானவர் மெல்வின் வான் பீபிள்ஸ். தொடர்ந்து நாவல்கள் எழுதி வந்த அவர், சில ஆண்டுகளுக்குப் பின்னர் பத்திரிகையாளராக மாறினார்.

பிரபல ஹாலிவுட் நடிகர் ‘கறுப்பின மக்கள் சினிமாவின் பிதாமகன்’மெல்வின் வான் பீபிள்ஸ் மறைவு -ரசிகர்கள் இரங்கல்

‘பிரான்ஸ் அப்சர்வாச்சூர்’ என்கிற பத்திரிகையில் புலனாய்வு பத்திரிகையாளராகவும் பணியாற்றியிருக்கிறார் மெல்வின். அதன்பின்னர் சரி என்கிற ஆங்கில பத்திரிக்கையிலும் எழுத்தாளராக இருந்திருக்கிறார். ஹரா கிரி என்கிற பத்திரிகையில் எழுத்தாளராக இருந்திருக்கிறார். 1965 ஆம் ஆண்டில் madஎன்கிற பத்திரிகையின் பிரெஞ்ச் மொழி பதிப்பின் தலைமை செய்தி ஆசிரியராகவும் பணி புரிந்து வந்திருக்கிறார்.

பிரபல ஹாலிவுட் நடிகர் ‘கறுப்பின மக்கள் சினிமாவின் பிதாமகன்’மெல்வின் வான் பீபிள்ஸ் மறைவு -ரசிகர்கள் இரங்கல்

ஸ்வீட் ஸ்வீட்பேக்கின் பாடாஸ்ஸ்ஸ்ஸ் பாடல் மூலம் 1971 ஆம் ஆண்டில் மெல்வின் இயக்குநராக திரையுலகில் அறிமுகமானார். வாட்டர்மலன் மேன் மற்றும் ஸ்வீட் ஸ்வீட்பேக்கின் பாடாஸ்ஸ்ஸ்ஸ் பாடல் , மூன்று நாள் பயணத்தின் கதை(The Story of a Three-Day Pass)படங்களின் மூலம் ஹாலிவுட்டில் தனி முத்திரை பதித்தவர் மெல்வின்.

பிரபல ஹாலிவுட் நடிகர் ‘கறுப்பின மக்கள் சினிமாவின் பிதாமகன்’மெல்வின் வான் பீபிள்ஸ் மறைவு -ரசிகர்கள் இரங்கல்

திரையில் மெல்வின் முன்வைத்த அரசியல் இன்று வரைக்கும் அமெரிக்க சினிமாவில் பேசப்பட்டு வருகிறது. ஐரோப்பாவிற்கு சென்ற மெல்வின் சில ஆண்டுகள் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வந்திருக்கிறார் . அங்கும் அவர் குறும்படங்களை இயக்கி வந்திருக்கிறார்.

பிரபல ஹாலிவுட் நடிகர் ‘கறுப்பின மக்கள் சினிமாவின் பிதாமகன்’மெல்வின் வான் பீபிள்ஸ் மறைவு -ரசிகர்கள் இரங்கல்

70 களின் பிளாக் சினிமாவில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் மெல்வின். ஹாலிவுட்டில் இவர் கருப்பின மக்கள் சினிமாவின் பிதாமகன் என்று அழைக்கப்பட்டு வந்தார். பிளாக் சினிமா முன்னோடி மெல்வின் வான் பீபிள்ஸ்க்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு. மெல்வின் மறைவை அடுத்து உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.