பிரபலங்கள் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்… இளைஞரை மனநல மருத்துவமனையில் சேர்க்க முடிவு!

பிரபலங்கள் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்… இளைஞரை  மனநல மருத்துவமனையில் சேர்க்க முடிவு!

திரையுலக பிரபலங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் இளைஞரை மனநல மருத்துவமனையில் சேர்க்க முடிவு செய்திருப்பதாக விழுப்புரம் எஸ்பி தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலமாக சினிமா பிரபலங்கள் ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டோர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது வாடிக்கையாகி வருகிறது. ஒவ்வொரு முறையும் அது வதந்தி என கண்டுபிடிக்கப்படும் நிலையில், விழுப்புரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தான் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று இரவும் நடிகர் அஜீத் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

பிரபலங்கள் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்… இளைஞரை  மனநல மருத்துவமனையில் சேர்க்க முடிவு!

கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்த அந்த இளைஞர், நடிகர் அஜித் வீட்டில் சற்று நேரத்தில் வெடிகுண்டு வெடித்து சிதறும். முடிந்தால் தடுத்து பாருங்கள் என கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார். இதையடுத்து, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜீத் வீட்டுக்கு சென்ற போலீசார் சோதனை நடத்தி வெடிபொருள் எதுவும் இல்லை என கண்டுபிடித்தனர். மேலும் செல்போனில் பேசிய அந்த நபர், ஏற்கனவே பல திரைப்பிரபலங்கள் வீட்டுக்கு மிரட்டல் விடுத்த விழுப்புரம் மரக்காணம் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வர் தான் என்பதையும் கண்டுபிடித்தனர்.

பிரபலங்கள் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்… இளைஞரை  மனநல மருத்துவமனையில் சேர்க்க முடிவு!

இந்த நிலையில், புவனேஸ்வரை மனநலம் பாதிக்கப்பட்ட மருத்துவமனையில் சேர்க்க திட்டமிட்டிருப்பதாக விழுப்புரம் எஸ்.பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட புவனேஸ்வருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட தொலைபேசி எண்கள் நினைவில் இருப்பதாகவும் தொலைபேசி கிடைத்தால் உடனே போன் செய்து இது போன்ற மிரட்டல் விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.