வாக்களிக்காத பிரபலங்கள்! கேப்டன் இப்படி பன்னிட்டாரே…

 

வாக்களிக்காத பிரபலங்கள்! கேப்டன் இப்படி பன்னிட்டாரே…

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலையில் கொஞ்சம் மந்தமாக இருந்தாலும் மாலையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. தமிழகத்திலுள்ள அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள், மூத்த குடிமக்கள் என அனைவரும் உற்சாகமாக வாக்களித்தனர்.

வாக்களிக்காத பிரபலங்கள்! கேப்டன் இப்படி பன்னிட்டாரே…

இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டதால் இன்று சசிகலா வாக்களிக்கவில்லை. அதேபோல் தேமுதிக தலைவர் விஜயகாந்தும் இன்று வாக்களிக்கவில்லை. இதேபோல் திரைபிரபலங்களில் ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, யுவன், மணிரத்னம், வெற்றிமாறன், கவுண்டமணி, வடிவேலு, பாக்யராஜ், கார்த்திக், பிரபுதேவா, லாரன்ஸ், விஷால், இயக்குநர் சுந்தர்.சி, சமுத்திரக்கனி, ஜி.வி.பிரகாஷ், கோவை சரளா உள்ளிட்டோர் தங்களது வாக்கினை பதிவு செய்யவில்லை. ‘தி க்ரே மேன்’ ஹாலிவுட் படத்துக்காக அமெரிக்காவில் இருப்பதால் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா வாக்களிக்க வரவில்லை.