‘வீட்டில் யோகா-குடும்பத்தாருடன் யோகா’… கலங்கவைக்கும் கருப்பொருள்!!

 

‘வீட்டில் யோகா-குடும்பத்தாருடன் யோகா’… கலங்கவைக்கும் கருப்பொருள்!!

இந்தியாவில் யோகாவுக்கு சுமார் 5000 ஆண்டுக்கால பாரம்பரியம் இருக்கின்றது. உடல் மற்றும் மனம் இரண்டின் ஒருங்கிணைப்புக்கும், ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் யோகா உதவுகின்றது என்பது யோகா பயிற்சி செய்பவர்களின் நம்பிக்கை. இந்தியாவின் முன்னெடுப்பால் 21.6.2015 முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. உலகின் அனைத்து நாடுகளும் யோகா தினத்தைக் கொண்டாடி வருகின்றன. ஆறாவது சர்வதேச யோகா தினத்தை வித்தியாசமாகக் கொண்டாட வேண்டிய சூழலுக்குக் கொரோனா பெருந்தொற்று நம்மை ஆளாக்கியுள்ளது. பொது இடங்களில் பலர் ஒன்று சேர முடியாத இச்சூழலில் “வீட்டில் யோகா-குடும்பத்தாருடன் யோகா” என்பதே இந்த ஆண்டின் கொண்டாட்ட முறையாகி உள்ளது.

‘வீட்டில் யோகா-குடும்பத்தாருடன் யோகா’… கலங்கவைக்கும் கருப்பொருள்!!

உடல் ஆரோக்கியத்தையும் மன வலிமையையும் தருகின்ற யோகா, உடல்-மனம்-ஆன்மா ஆகிய மூன்றின் ஒன்றிணைவுக்கு உதவுகின்றது. ஒரு சில அறுவை சிகிச்சைகளை யோகா செய்து வருவதன் மூலம் தவிர்த்துவிடமுடியும் என கூறுகின்றனர் அறுவை சிகிச்சை நிபுணர்கள். குறிப்பாக நாட்பட்ட நோய்களுக்கு யோகாசனம் நல்ல பலன்களை அளிக்கிறது என்றும், நீரிழிவு, முதுகுத்தண்டுவட தேய்வு, மாதவிடாய் மற்றும் வயதானவர்களின் மூட்டுப் பிரச்சனை ஆகிய 4
உடல்நலக் கோளாறுகளுக்கு யோகா நல்ல பலனை தருவதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கின்றார்.

‘வீட்டில் யோகா-குடும்பத்தாருடன் யோகா’… கலங்கவைக்கும் கருப்பொருள்!!

யோகா பொதுவாக உடல் ஆரோக்கியத்தைப் பேனவும் நோய் எதிர்ப்பாற்றலை
அதிகரிக்கவும் குறிப்பிட்ட நோய்களுக்கான சிகிச்சையாகவும் பயன்படுகிறது. இந்த சர்வதேச யோகா தினத்தில் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு யோகப் பயிற்சிகளைத் தொலைக்காட்சி அல்லது யூடியூப் மூலம் தெரிந்து கற்றுக் கொண்டு அதைத் தொடர்ந்து
செய்து வருவோம்.