காவல் நிலையங்களில் சிசிடிவி : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

 

காவல் நிலையங்களில் சிசிடிவி : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

நாட்டின் அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

காவல் நிலையங்களில் சிசிடிவி : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

பொதுமக்கள் மீதான போலீசாரின் வன்முறைகள் எல்லை மீறிச் செல்கிறது. அண்மையில் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து மதுரையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவமும், விருதாச்சலத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வியாபாரி செல்வமுருகன் திடீரென உயிரிழந்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காவல் நிலையங்களில் சிசிடிவி : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

இவ்வாறாக போலீசார் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களிலும் இதே நிலை நீட்டிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காவல்நிலையங்களில் மனித உரிமை மீறல்களை தடுப்பதற்காக சிசிடிவி கேமரா அமைக்கக் கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேச அரசுகளும் காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். ஏற்கனவே பிறப்பித்த வழிகாட்டு நெறிமுறைகளுடன் மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்னர்.