darbar
  • January
    20
    Monday

தற்போதைய செய்திகள்

Main Area

cctv footage

ஆரோக்கியம்

கடவுள் கொடுத்தாரு எடுத்தேன்... வடிவேலு பட பாணியில் கொள்ளையடித்ததை பலே திருடன்!

சென்னை பம்மல் சங்கர் நகரைச் சேர்ந்தவர் சாமுவேல் ஜேக்கப். இவர் வணிகர் சங்க பேரமைப்பில் நிர்வாகியாக உள்ளார். இவர் கடந்த 8ம் தேதி (வெள்ளிக்கிழமை) வீட்டைப் பூட்டிவிட்டு தேவாலயத்துக்கு ...


இளைஞர்

இரவுகளில் வீட்டு வாசலில் இளைஞர் செய்யும் அட்டூழியம்! காவல் நிலையத்தில் புகார்!

தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் தான் இருக்கிறது என்றால், பெட்ரோல் விலை அதனுடன் போட்டி போட்டுக் கொண்டு ஏறி வருகிறது.  விதவிதமான திருட்டுகளில் ஈடுபட்டு வரும் கும்பல், சமீபமாய் வாக...


 சிசிடிவி காட்சி

முதியவரின் ஸ்கூட்டரை கண்ணிமைக்கும் நேரத்தில் அபேஸ் செய்த பெண்: அதிர வைக்கும் சிசிடிவி காட்சி!

பட்டப்பகலில் பெண் ஒருவர் ஸ்கூட்டரை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


குற்றவாளி

60க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் 160 கிமீ கொள்ளையனைத் துரத்திச் சென்ற போலீஸ்

சென்னையில் தொடர் கொள்ளைகள் நடைப்பெற்று வருவது சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டதும் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ளது. சிசிடிவி கேமராக்களின் உதவியால் பல்வேறு கொள்ளை, கொலை சம்பவங்களி...

7 வயதுச் சிறுமி வன்புணரப்பட்டு கொலை - சிசிடிவி காட்சிகள் மூலம் கொலையாளியைத் தேடும் போலீசார்

7 வயதுச் சிறுமியை வன்புணர்ந்து கொன்ற வழக்கில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து காவல் துறையினர் கொலையாளியத் தேடி வருகின்றனர்.

திட்டமிட்டுக் கடத்தல் 

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று பாதிக்கப்பட்ட சிறுமியும் அவரது தம்பியும் பட்டம் விடுவதற்கான கயிறு வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த அறிமுகமில்லாத நபர் ஒருவர் தனக்கும் பட்டம் விட கயிறு வேண்டும் என்று சிறுவனிடம் 20 ரூபாய் கொடுத்து கடைக்கு அனுப்பி இருக்கிறார். பின்பு சிறுவன் வந்து பார்த்த போது சிறுமியைக் காணவில்லை. சிறுமி கடத்தப்பட்டது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

child abuse
சடலமாகக் கிடைத்தார் 

இந்நிலையில், அன்று மாலையே மீர்பூர் காவல்நிலையம் அருகே உள்ள தோட்டத்தில் சிறுமி ஒருவரின் சடலம் கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடம் அவர் காணாமல் போன இடத்திலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

child abuse
கண்காணிப்பு கேமரா காட்சிகள் 

பிரேதப் பரிசோதனையில் சிறுமி வன்புணரப்பட்டு கொல்லப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கொலையாளியைப் பிடிப்பதில் காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். சிறுமி காணாமல் போன இடத்தில இருந்த கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசார், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து கொலையாளியை அடையாளம் கண்டு விசாரித்து வருகின்றனர்.

mithra Sat, 03/23/2019 - 11:36
child abuse Sexual harrassment Uttar Pradesh cctv footage child abuse இந்தியா

English Title

7-year-old girl abducted and raped, police track CCTV footage to identify culprit

News Order

0

Ticker

0 
mercy

நெல்லையில் இளம்பெண் கத்தியால் குத்தி படுகொலை: நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!

தனியார் ஜவுளிக் கடையில் பணியாற்றி வந்த மெர்சி என்ற இளம்பெண்ணை, ரவி என்ற வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.