3000 டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள்: தமிழக அரசு அறிவிப்பு

 

3000 டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகம் முழுவதிலும் 5000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. சென்னையைத் தவிரப் பிற மாவட்டங்களில், மதுபானங்களை விற்பனை செய்யும் ஊழியர்கள் தான் அந்த பணத்தை வங்கியில் செலுத்த வேண்டும். அந்த சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவங்கள் நடைபெறுகின்றன. அதுமட்டுமின்றி, 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மதுபானம் விற்பனை செய்வதைத் தடுக்கவும், சில நேரங்களில் குறிப்பிடப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்கும் கடைகளைக் கண்காணிக்கவும் சிசிடிவி கேமராக்களை பொருத்த டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகக் கடந்த ஆண்டே தகவல்கள் வெளியானது.

3000 டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள்: தமிழக அரசு அறிவிப்பு

இந்த நிலையில் அதிகமாக மது விற்பனை நடக்கும் கடைகள், ஏற்கனவே திருட்டு சம்பவங்கள் நடைபெற்ற கடைகள், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ள கடைகள் உள்ளிட்ட 3000 டாஸ்மாக் கடைகளைக் கண்டறிந்து 6000 சிசிடிவி கேமராக்களை பொறுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், மாவட்ட வாரியாக எந்தெந்த கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.