‘இந்தப் பாடங்களுக்குப் பதில் எந்த பாடங்களை நீக்கவேண்டும் ஸ்டாலின் அவர்களே?’ பாஜக நாராயணன் கேள்வி

 

‘இந்தப் பாடங்களுக்குப் பதில் எந்த பாடங்களை நீக்கவேண்டும் ஸ்டாலின் அவர்களே?’ பாஜக நாராயணன் கேள்வி

கொரோனாவால் விடப்பட்ட விடுமுறையால் பாடங்களைக் குறைக்கும் முடிவை சி.பி.எஸ்.இ எடுத்தது. அதன்படி குறைக்கப்பட்ட பாடங்களில், தமிழ் பாடத்தில் பெரியார் சிந்தனைகள், ம.பொ.சி எல்லை போராட்டம் உள்ளிட்டவை நீக்கப்பட்டதாக திமுக தலைவர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். கல்வியாளர்களும் இதைச் சுட்டிக்காடியிருந்தார்கள். இந்த விவகாரம் குறித்து பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் டிவிட்டரில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சில கேள்விகளைக் கேட்டுள்ளார்.

‘இந்தப் பாடங்களுக்குப் பதில் எந்த பாடங்களை நீக்கவேண்டும் ஸ்டாலின் அவர்களே?’ பாஜக நாராயணன் கேள்வி

அந்தக் கேள்விகளின் வழியே நாராயணன் கூறியுள்ளது, ‘இராணுவ உடையில் திருக்குறளை சுட்டும் பிரதமர் ‘ராணுவத்தில் தமிழர் பங்கு’ என்ற CBSE பாடத்தை நீக்குகிறார்.தமிழர் நேசிக்கும் சிலப்பதிகாரம், பெரியார் சிந்தனைகள், ம.பொ.சி-ன் எல்லைப் போராட்டம் ஆகியவற்றை மீண்டும் இணைக்க மறுத்தால் இம்மண்ணில் NOTA வை தாண்டுவதைக் கூட பாஜக மறந்துவிடலாம்!” என்று தி மு க தலைவர் ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார்.

சி பி எஸ் இ தமிழ் பாடமானது மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பாடத்திட்டத்தின் படியே அமைந்துள்ளது. கொரோனா பேரிடர் காரணமாக மாணவர்களின் சுமையை குறைப்பதற்காக சி பி எஸ் இ கல்வி வாரியமானது, இந்தக் கல்வியாண்டிற்கான அனைத்துப் பாடங்களிலும் 30 விழுக்காட்டைக் குறைத்து, திருத்தப்பட்ட பாடத்திட்டத்தை வெளியிட்டுள்ளது. மொத்தம் உள்ள ஒன்பது இயல்களில் முதல் ஆறு இயல்களை வைத்துகொண்டு, மீதமுள்ள மூன்று இயல்களை நீக்கியள்ளது. இந்த இயல்களில் ஸ்டாலின் அவரகள் குறிப்பிட்ட தலைப்புகள் அல்லாது ராமானுஜர் குறித்த பாடம், நாச்சியார் திருமொழி (ஆண்டாள்) உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளும் இடம் பெற்றிருந்தன என்பதை ஸ்டாலின் அவர்கள் மறந்து விட்டாரா? மறைத்து விட்டாரா? இந்த பாடங்களை நீக்குவதற்கு பதில் வேறு எந்த பாடங்களை நீக்க வேண்டும் என்கிறார் ஸ்டாலின் அவர்கள்?

‘இந்தப் பாடங்களுக்குப் பதில் எந்த பாடங்களை நீக்கவேண்டும் ஸ்டாலின் அவர்களே?’ பாஜக நாராயணன் கேள்வி

9 ம் வகுப்பு பாடத்திட்டத்தில் முதல் இயலில் திராவிட மொழி குடும்பம் என்ற தலைப்பிலும், கல்வி மற்றும் கல்வியிற் சிறந்த பெண்கள் என்ற தலைப்பிலும் பாடங்கள் இடம்பெற்றுள்ளது. அப்படியென்றால், திராவிட மொழி குறித்தும், கல்வியில் பெண்களின் பங்கு குறித்தும் உள்ள பாடங்களை நீக்கியிருக்க வேண்டும் என்கிறாரா .ஸ்டாலின் அவர்கள்?

அதே போல் மூன்றாம் இயலில், பண்பாடு என்ற தலைப்பில் ‘ஏறு தழுவுதல்’ குறித்த பகுதி இடம் பெற்றுள்ளது. நம் தமிழர் பண்பாடான ‘ஜல்லிக்கட்டு’ குறித்து மாணவர்களுக்குப் போதிக்க கூடாது என்று எண்ணுகிறாரா ஸ்டாலின் அவர்கள்? ஏற்கனவே தி மு க அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தான் காளைகளை காட்சிப்படுத்தக்கூடாத பட்டியலில் இணைத்து தமிழக கலாச்சாரத்திற்கு துரோகம் செய்யப்பட்டதை தொடர்கிறதா தி மு க என்ற சந்தேகம் எழுகிறது.

‘இந்தப் பாடங்களுக்குப் பதில் எந்த பாடங்களை நீக்கவேண்டும் ஸ்டாலின் அவர்களே?’ பாஜக நாராயணன் கேள்வி

மேலும்,10ம் வகுப்பு பாடத்திட்டத்தில் தமிழ் சொல் வளம், தமிழர் பண்பாடு, திருக்குறள் அறிவியல் மற்றும் சுற்றுசூழல் குறித்த பல்வேறு பாடங்கள் இருக்கும் நிலையில் அவைகளை நீக்கியிருக்க வேண்டும் என்கிறாரா ஸ்டாலின் அவர்கள்? தமிழ் சொல் வளம் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளக்கூடாது என்று தி மு க ஏன் எண்ணுகிறது?

மாநில பாடத்திட்டத்திற்கு ஆன்-லைன் வகுப்பே கூடாது என்று கூறும் திமுக, பாடங்களை நடத்தாமலே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வலியுறுத்தும் தி மு க, சி பி எஸ் இ பாடத்திட்டத்தில் 30 விழுக்காடு குறைப்பதை கண்டிக்கும் இரட்டை நிலைப்பாட்டை மக்கள் எரிச்சலோடு பார்க்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

‘இந்தப் பாடங்களுக்குப் பதில் எந்த பாடங்களை நீக்கவேண்டும் ஸ்டாலின் அவர்களே?’ பாஜக நாராயணன் கேள்வி

சி பி எஸ் இ வாரியத்தை பொறுத்தவரையில், பல கல்வியாளர்களை, வல்லுநர்களை கலந்தாலோசித்த பின்னரே ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் எந்த பாடங்களை நீக்க வேண்டும் என்ற முடிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், தி மு கவும் மற்ற எதிர்கட்சியினரும் கல்வியில் அரசியல் செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மாணவர்களை படிக்க விடுங்கள். முன்னேற விடுங்கள். பாழும் அரசியல் உள்நோக்கத்தினால் மாணவ,மாணவிகளின் எதிர்காலத்தை பாழாக்கும் நடவடிக்கைகளை நிறுத்தி கொள்ளுங்கள் என்று தி மு க தலைவர் ஸ்டாலின் அவர்களை கேட்டு கொள்கிறேன். இல்லையேல், வரக்கூடிய தேர்தலில், 2014 தேர்தலில் தி மு க வுக்கு கிடைத்த இடங்களையே மக்கள் மீண்டும் அளிப்பார்கள்’ என்று கூறியுள்ளார் பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன்.