சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு!

 

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு!

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் முடிவடைந்த நிலையில், அதன் முடிவுகளுக்காக மாணவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அந்தவகையில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 11 ஆம் தேதி வெளியிடப்படும் என செய்திகள் வெளியாகின. அதே போல் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இரண்டு நாள் கழித்து அதாவது ஜூலை 13ம் தேதி வெளியாகும் என்றும் தகவல்கள் வெளிவந்தன. ஆனால் இந்த தகவல் பொய்யானது என்றும் பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளை சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை காத்திருங்கள் என்றும் சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி தெரிவித்திருந்தார்.

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு!

இந்த நிலையில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியாகி இருப்பதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். cbseresults.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.