10 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலம் 2ஆம் இடம்!

 

10 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலம் 2ஆம் இடம்!

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் முடிவடைந்த நிலையில், அதன் முடிவுகளுக்காக மாணவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அந்தவகையில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 11 ஆம் தேதி வெளியிடப்படும் என செய்திகள் வெளியாகின. அதே போல் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இரண்டு நாள் கழித்து அதாவது ஜூலை 13ம் தேதி வெளியாகும் என்றும் தகவல்கள் வெளிவந்தன. ஆனால் அந்த தகவல் வதந்தி என்று சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

10 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலம் 2ஆம் இடம்!

அதனையடுத்து நேற்று முன்தினம் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து இன்று 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது சிபிஎஸ்இ மாணவர்களின் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. cbseresults.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவில் சென்னை மண்டலத்தில் 98.95% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. 99.28% தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் முதலிடமும் 98.23% தேர்ச்சியுடன் பெங்களூரு மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. மேலும், இந்த ஆண்டு 91.46% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 0.36% அதிகம் என்றும் தேர்வு எழுதிய 18,73,015 பேரில் 17,13,121 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.