சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என்ற அறிவிப்பு வதந்தி!

 

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என்ற அறிவிப்பு வதந்தி!

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் முடிவடைந்த நிலையில், அதன் முடிவுகளுக்காக மாணவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அந்தவகையில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் அதாவது ஜூலை 11 ஆம் தேதி வெளியிடப்படும் என செய்திகள் வெளியாகின. அதேபோல் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இரண்டு நாள் கழித்து அதாவது ஜூலை 13ம் தேதி வெளியாகும் என்றும் தகவல்கள் வெளிவந்தன். இந்த தகவலுக்கு சிபிஎஸ்இ மறுப்பு தெரிவித்துள்ளது.

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என்ற அறிவிப்பு வதந்தி!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து வெளியான தகவல் போலியானது என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளை சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை காத்திருங்கள் என்றும் சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி கூறியுள்ளார்.