சு.வெங்கடேசன் எம்பி எழுதிய ‘ஒரு’ கடிதம்… சிபிஎஸ்இ தேர்வு தேதிகளை மாற்றியமைத்த மத்திய அரசு!

 

சு.வெங்கடேசன் எம்பி எழுதிய ‘ஒரு’ கடிதம்… சிபிஎஸ்இ தேர்வு தேதிகளை மாற்றியமைத்த மத்திய அரசு!

மதுரை எம்பி சு.வெங்கடேசனின் கோரிக்கையை ஏற்று ரம்ஜானுக்காக தேர்வு தேதிகளை மாற்றியமைத்து மத்திய கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

சு.வெங்கடேசன் எம்பி எழுதிய ‘ஒரு’ கடிதம்… சிபிஎஸ்இ தேர்வு தேதிகளை மாற்றியமைத்த மத்திய அரசு!

இதுதொடர்பாக சிபிஎஸ்இ இயக்குநருக்கும், அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு வெங்கடேசன் எழுதிய கடிதத்தில், “ரம்ஜான் இஸ்லாமியர்களின் முக்கிய திருநாள். இவ்வாண்டு மத்திய, மாநில அரசுகள் மே 14ஆம் தேதி ரம்ஜான் விடுமுறையை அறிவித்துள்ளன. ஆனால் பிறை தென்படுவதைப் பொறுத்து ரம்ஜான் தேதி ஒரு நாள் முன்னதாகவோ, பின்னதாகவோ மாற வாய்ப்புள்ளது. இதைக் கணக்கில் கொள்ளாமல் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வுகளை மே 13, 15 தேதிகளில் அறிவித்துள்ளது. ரம்ஜான் தேதி மாறும் பட்சத்தில் இஸ்லாமிய மாணவர்கள் சிரமத்துக்குள்ளாவார்கள். எனவே தேர்வு தேதிகளை மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இக்கடிதம் தொடர்பாகப் பரிசீலனை செய்துகொண்டிருப்பதாக ரமேஷ் பொக்ரியால் தெரிவித்திருந்த நிலையில், தற்போது மாற்றியமைக்கப்பட்ட தேர்வு தேதிகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. அதன்படி மே 13,15 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் வேறு நாட்களுக்கும் அந்த நாட்களில் நடைபெறவிருந்த தேர்வுகள் வேறு நாட்களுக்கும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி 10ஆம் வகுப்புக்கு மே 15ஆம் தேதி நடைபெறவிருந்த அறிவியல் தேர்வு மே 21ஆம் தேதிக்கும், அன்று நடைபெறவிருந்த கணித தேர்வு ஜூன் 2ஆம் தேதியும் மாற்றப்பட்டுள்ளன.

சு.வெங்கடேசன் எம்பி எழுதிய ‘ஒரு’ கடிதம்… சிபிஎஸ்இ தேர்வு தேதிகளை மாற்றியமைத்த மத்திய அரசு!

அதேபோல 12ஆம் வகுப்பு அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு மே 13இல் நடைபெறவிருந்த இயற்பியல் ஜூன் 8இல் நடைபெறும். வணிகப் பிரிவு மாணவர்களுக்கு மே 31ஆம் தேதி கணித தேர்வு நடைபெறும். கலை பிரிவு மாணவர்களுக்கு ஜூன் 2இல் நடைபெறவிருந்த புவியியல் தேர்வு அடுத்த நாளுக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.