கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு சிபிஎஸ்இ சலுகை!

 

கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு சிபிஎஸ்இ சலுகை!

கொரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்த மாணவர்கள் அடுத்த ஆண்டு 10 மற்றும்12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினால் பதிவு கட்டணமோ, தேர்வு கட்டணமோ செலுத்த வேண்டாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு சிபிஎஸ்இ சலுகை!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு இன்னும் குறைந்தபாடில்லை. பள்ளிகள் மூடப்பட்டு தற்போது படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் முக்கிய தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் கொரோனா தொற்று நாட்டை மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ள நிலையில் மாணவர்கள் மீது பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது.

கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு சிபிஎஸ்இ சலுகை!

இதனால் அடுத்த ஆண்டு சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கொரோனா பாதிப்பினால் பெற்றோர் அல்லது பாதுகாவலர் இழந்திருந்தால் அவர்கள் பதிவு கட்டணமும் , அல்லது தேர்வுக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என்று சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்களை சமர்பிக்கும் போது கொரோனாவால் பெற்றோர் அல்லது பாதுகாவலரை இழந்தவர் என்ற தகவல்களையும் பள்ளிகள் ஆராய்ந்து வழங்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.