மாணவர்களுக்கு நற்செய்தி… பேஸ்புக்குடன் கூட்டணி வைக்கும் சிபிஎஸ்இ… வரவிருக்கும் புதிய தொழில்நுட்பம்!

மாணவர்களுக்கு நற்செய்தி… பேஸ்புக்குடன் கூட்டணி வைக்கும் சிபிஎஸ்இ… வரவிருக்கும் புதிய தொழில்நுட்பம்!

இதுகுறித்து மத்திய அரசின் இடைநிலைக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
“வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களில் பார்க்கும் போது ஆகுமெண்ட்டட் ரியாலிட்டி தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்ப வசதியாக எதிர்காலத்தில் இருக்கும் என்று தெரிகிறது. ஆக்குமெண்டெட் ரியாலிட்டி அல்லது விர்ச்சுவல் ரியாலிட்டி தான் டிஜிட்டல் தளங்களில் எதிர்காலத்தில் வரவிருக்கும் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டுவர இருக்கின்றன. எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பங்களைக் கற்பவர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் உருவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு நற்செய்தி… பேஸ்புக்குடன் கூட்டணி வைக்கும் சிபிஎஸ்இ… வரவிருக்கும் புதிய தொழில்நுட்பம்!
அதே சமயத்தில் இணையத்தின் பயன்பாடுகள் அதிகரிக்க அதிகரிக்க ஆன்லைன் குற்றச்சாட்டுகள், துன்புறுத்தல்கள், வன்முறைகள் மற்றும் தவறான தகவல்களை பரப்புதல், இன்டர்நெட் அடிக்சன் போன்றவையும் வளர்ந்து கொண்டே போகின்றன. கொரோனா காரணமாக வேலையிழந்த பலர் விரக்தியுடனும் மன அழுத்தத்துடன் போராடிக் கொண்டிருக்கின்றனர். பள்ளிகள் மூடப் பட்டிருப்பதால் தற்போது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆன்லைன் தளங்கள் மூலமாக ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள ஒரு தளம் உருவாக்கப் பட வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

மாணவர்களுக்கு நற்செய்தி… பேஸ்புக்குடன் கூட்டணி வைக்கும் சிபிஎஸ்இ… வரவிருக்கும் புதிய தொழில்நுட்பம்!
இந்த சவால்கள் மற்றும் விளைவுகளை எதிர்கொள்ளும் திறன் கட்டாயம் இந்த நேரத்தில் நமக்கு அதிகம் தேவைப்படுகிறது. பேஸ்புக் இந்தியா நிறுவனத்துடன் சிபிஎஸ்சி கூட்டணி வைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான இலவச ட்ரெய்னிங் புரோகிராமை உதவி பெறும் பள்ளிகளுக்கு முதலில் வழங்க திட்டமிட்டுள்ளனர். இது ஆகஸ்ட் மாதம் ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையிலான காலத்தில் நடைமுறைக்கு வரலாம். இதில் பங்கு வரும் அனைவருக்கும் சிபிஎஸ்சி மற்றும் பேஸ்புக்கில் இருந்து இ-சர்டிபிகேட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.”
மேலும் இதில் கலந்து கொள்ளுவதற்கான லிங்குகளையும் கொடுத்துள்ளனர்.