அச்சுறுத்தும் கொரோனாவால் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து!

 

அச்சுறுத்தும் கொரோனாவால் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து!

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. அதே போல சி.பி.எஸ்.சி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளும் பாதியிலேயே ஒத்தி வைக்கப்பட்டன. சில நாட்களுக்கு முன்னர் மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ஜூலை 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான தேர்வுகள் நடைபெறும் என்று அறிவித்திருந்த நிலையில், தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படவில்லை.

அச்சுறுத்தும் கொரோனாவால் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து!

அதனைத்தொடர்ந்து, கடந்த 18 ஆம் தேதி, சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுக்கான அட்டவணையை சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சன்யம் பரத்வாஜ் வெளியிட்ட நிலையில் அந்தந்த பள்ளிகளிலேயே 10 மற்றும் 12ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் தேர்வுக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

இந்நிலையில் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் எழுந்த வழக்கில், சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்வதாக மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மேலும், மாநில அரசுகளிடம் பெறப்பட்ட கருத்துக்களின் அடைப்படையில் தேர்வு ரத்து செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.