சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு மறு தேர்வுக்கான அட்டவணை வெளியீடு!

 

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு மறு தேர்வுக்கான அட்டவணை வெளியீடு!

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பில் பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கும், குறிப்பிட்ட சில பாடங்களில் எதிர்பார்த்த மதிப்பெண்களைவிட குறைந்த மதிப்பெண் பெற்று முன்னேற்றத் தேர்வுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கும் செப்டம்பர் மாதம் மறுத்தேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. இந்த மறுத்தேர்வை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கான்வில்கர் தலைமையிலான அமர்வு, மறுதேர்வு நடத்தும் விவகாரத்தில் வரும் 7-ம் தேதிக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி சிபிஎஸ்இ-க்கு உத்தரவிட்டனர்.

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு மறு தேர்வுக்கான அட்டவணை வெளியீடு!

இந்நிலையில் 10 ஆம் வகுப்புக்கு செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையும், 12 ஆம் வகுப்புக்கு செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையும் தேர்வு நடைபெறும் என தேர்வு தேதியை சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ மறுதேர்வு நடைபெற்றால் 10ம் வகுப்பில் 1.5 லட்சம் மாணவர்களும், 12ம் வகுப்பில் 87 ஆயிரம் மாணவர்களும் தேர்வு எழுதுவார்கள்.