ரம்ஜான் பண்டிகை: தேர்வு தேதியை மாற்றி வைத்த சிபிஎஸ்இ

 

ரம்ஜான் பண்டிகை: தேர்வு தேதியை மாற்றி வைத்த சிபிஎஸ்இ

கொரோனா பரவலால் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகள் இன்றளவும் திறக்கப்படவில்லை. சில மாநிலங்களில் மட்டும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை ஆன்லைனில் மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. சிபிஎஸ்இ உள்ளிட்ட மாநிலக் கல்வித் திட்டங்களில் பாடங்கள் குறைக்கப்பட்டன. இந்த சூழலில் கடந்த மாதம் சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டன.

ரம்ஜான் பண்டிகை: தேர்வு தேதியை மாற்றி வைத்த சிபிஎஸ்இ

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 4ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 7ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்றும் தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி 1.30 மணிக்கு முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 4 ஆம் தேதி முதல் ஜூன் 11ஆம் தேதி வரை தேர்வுகள் நடக்கவுள்ளது. இந்த தேர்வுக்ள் காலை 10.30-1.30, மதியம் 2.30-5.30 மணிக்கு நடைபெறவிருக்கின்றன.

இந்நிலையில் மே 13, 15 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்த 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளன. ரம்ஜான் காரணமாக வேறு தேதிக்கு தேர்வை மாற்றி, சிபிஎஸ்இ திருத்தப்பட்ட அட்டவணையை வெளியிட்டுள்ளது.