சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து?

 

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து?

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் மேலும் 3.43 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 2.4 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் 4,000 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2.62 லட்சமாக அதிகரித்துள்ளது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு ரத்து செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை எழுப்பினர். இதனால் மே 4ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை நடக்கவிருந்த சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து?

இந்நிலையில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்து சிபிஎஸ்இ நிர்வாகம் ஜூன் முதல் தேதி முடிவெடுக்க உள்ளதாக அறிவித்தது. இந்த சூழலில் தேர்வுகளை ரத்து செய்து மாணவர்களை காப்பாற்றுங்கள் என சேவ் போர்ட் ஸ்டூடன்ட்ஸ் (save board students)என்ற ஹேஷ்டேக்கை சமூக ஊடகங்களில் உருவாக்கியுள்ள பெற்றோர்கள், இதற்கு ஆதரவு திரட்டி வருகின்றனர். இதனால் தேர்வுகள் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.