வெளியானது சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு ரிசல்ட்… 99.4% மாணவர்கள் பாஸ்!

 

வெளியானது சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு ரிசல்ட்… 99.4% மாணவர்கள் பாஸ்!

கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு ரத்துசெய்யப்பட்டன. அதேபோல நீண்ட ஆலோசனைக்குப் பிறகு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டது. இதற்குப் பிறகு முந்தைய வகுப்புகளில் நடைபெற்ற தேர்வு மதிப்பெண்கள் மூலம் மாணவர்கள் அனைவருக்கும் மதிப்பெண் முறை அறிவிக்கப்பட்டது. சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் ஜூலை 30ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின. மொத்தம் 99.37% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

வெளியானது சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு ரிசல்ட்… 99.4% மாணவர்கள் பாஸ்!

இச்சூழலில் இன்று மதியம் 12 மணிக்கு சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. 20 லட்சத்து 97 ஆயிரத்து 128 பேர் தேர்வெழுதப் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 20 லட்சத்து 76 ஆயிரத்து 997 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 99.4%. 98.89% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 16,639 பேரின் தேர்வு முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு 91.34% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

மாணவர்கள் தங்களின் பதிவெண்ணைக் குறிப்பிட்டுத் தேர்வு முடிவுகளைப் பார்க்கலாம். cbse.nic.in, cbseresults.nic.in, cbse.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளைக் காணலாம். அதேபோல மத்திய அரசின் digilocker.gov.in, UMANG மற்றும் DigiLocker செயலிகளிலும் தேர்வு முடிவுகளைக் காண முடியும். அதேபோல பதிவெண்ணை முன்கூட்டியே அறியாதவர்கள் https://cbseit.in/cbse/2021/rfinder/RollDetails.aspx என்ற இணைய முகவரியில் தங்களின் பதிவெண்ணைக் கண்டறியலாம்.