#BREAKING சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து!

 

#BREAKING சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து!

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

#BREAKING சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து!

கொரோனா பாதிப்பிலிருந்து 1,23,36,036 பேர் குணமாகியுள்ள நிலையில், 13,65,704 பேர் சிகிச்சையில் உள்ளனர். அத்துடன் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசியை 11,11,79,578 பேர் எடுத்துக்கொண்டுள்ளனர்.இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் மேலும் 1,84,372 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 1,38,73,825 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் 1,027 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,72,085 ஆக அதிகரித்துள்ளது. இதனால் 11 மாநிலங்களில் கொரோனா அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி சிபிஎஸ்இ பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு ரத்து செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை எழுப்பினர். இந்த சூழலில் பிரதமர் மோடியுடன் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று ஆலோசனை நடத்தினார்.

#BREAKING சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து!

இந்நிலையில் மே 4ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை நடக்கவிருந்த சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜூன் ஒன்றாம் தேதி கொரோனா பரவலை ஆய்வு செய்தபின் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு நடத்துவதற்கு முன் 15 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது