சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு… ரிசல்ட் இன்று வெளியாகிறது!

 

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு… ரிசல்ட் இன்று வெளியாகிறது!

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவல் காரணமாக மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் பயின்ற 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து, மாநிலங்களுக்கான பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு… ரிசல்ட் இன்று வெளியாகிறது!

சிபிஎஸ்இ 12 வகுப்பு மாணவர்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்புகளில் எடுத்த மதிப்பெண்கள் தலா 30 சதவீதமும் 12ம் வகுப்பு பருவத்தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்கள் 40 சதவீதமும் கணக்கிடப்பட்டு மொத்த மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் படி, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியாகிறது. www.cbseresults.nic.in என்ற இணையதளத்தில் முடிவுகள் வெளியாகும் என சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.

மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதும் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதலாம் என்றும் கொரோனா பாதிப்பு குறைந்து பிறகு அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.