சிபிஎஸ்இ 10,12ஆம் வகுப்புக்களுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு!

 

சிபிஎஸ்இ 10,12ஆம் வகுப்புக்களுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு!

கொரோனா பரவலால் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் இன்றளவும் திறக்கப்படவில்லை. சில மாநிலங்களில் மட்டும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை இணையத்தில் பாடங்கள் நடத்தப்பட்டுவந்தன. சிபிஎஸ்இ உள்பட மாநிலக் கல்வித் திட்டங்களில் பாடங்கள் குறைக்கப்பட்டன.

சிபிஎஸ்இ 10,12ஆம் வகுப்புக்களுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு!

இச்சூழலில் இன்று சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை இன்று அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்திருந்தார். அதன்படி தற்போது தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 4ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 7ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகின்றன. தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி 1.30 மணிக்கு முடிவடையும்.

அதேபோல 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 4இல் தொடங்கி ஜூன் 11ஆம் தேதி முடிவடைகின்றன. காலை 10.30-1.30, மதியம் 2.30-5.30 என இரு நேரங்களாக தேர்வுகள் நடைபெறவிருக்கின்றன.