தந்தை, மகன் மரண வழக்கில் எப்ஐஆர் ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சிபிசிஐடி!

 

தந்தை, மகன் மரண வழக்கில் எப்ஐஆர் ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சிபிசிஐடி!

தமிழகத்தையே உலுக்கியுள்ள சாத்தான்குளம் விசாரணை கைதிகளான தந்தை – மகன் இருவரும் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்லப்பட்ட அவர்கள் ஆசனவாயில் ரத்தம் சொட்டிய படி உடலில் பல காயங்களுடன் இறந்தனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்து வந்த உயர்நீதி மன்ற மதுரைகிளை தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக சாத்தான்குளம் காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என தெரிவித்துள்ளது. முதல் தகவல் அறிக்கை மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகளின் முரண்பாடு இருக்கிறது. உடலில் மோசமான காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. எனவே பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என்று கூறியுள்ளது.

தந்தை, மகன் மரண வழக்கில் எப்ஐஆர் ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சிபிசிஐடி!

இந்த வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவின் பேரில் நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபினபு அவர்களிடமிருந்து சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் பெற்றுக்கொண்டார். இதன்படி தற்போது முதல் சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.

சிபிசிஐடி ஐஜி சங்கர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் சிபிசிஐடி எஸ்பி விஜயகுமார், டிஎஸ்பி அனில் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். வழக்கு தொடர்பான அனைத்து இடங்களுக்கும் சென்று சிபிசிஐடி அதிகாரிகள் இன்று விசாரணை நடத்த உள்ளனர். போலீசார் விடிய விடிய அடுத்ததாக மாஜிஸ்ட்ரேட்டின் அதிர்ச்சி அறிக்கை வெளியான நிலையில் விசாரணை தீவிரமடைந்துள்ளது. அரசு கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் சந்தேக மரணம் என சிபிசிஐடி வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் இன்று காலை மீண்டும் விசாரணை நடத்தியுள்ளார்.

தந்தை, மகன் மரண வழக்கில் எப்ஐஆர் ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சிபிசிஐடி!

அந்த வகையில் தந்தை மகன் சித்திரவதை மரணம் தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இன்று காலை சிபிசிஐடி விசாரணை தொடங்கியது. ஜெயராஜன் செல்போன் கடை, கோவில்பட்டி கிளை-சிறை, கோவில்பட்டி மருத்துவமனையிலும் விசாரித்தது. நேரடி சாட்சியான பெண் காவலர் ரேவதி உள்ளிட்டோரிடம் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இந்த வழக்கில் தொடர்புடைய அதிகாரிகளை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர சிபிசிஐடி முடிவெடுத்துள்ளது. மேலும் சாத்தான்குளத்தில் உள்ள வீட்டில் ஜெயராஜ் மனைவி, மகளிடம் சிபிசிஐடி டிஎஸ்பி அனில் குமார்விசாரணை நடத்தினார்.

தந்தை, மகன் மரண வழக்கில் எப்ஐஆர் ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சிபிசிஐடி!
இந்நிலையில் தந்தை, மகன் மரண வழக்கில் எப்ஐஆர், ஆவணங்களை நீதிமன்றத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்தது. கோவில்பட்டி ஜெ.எம்.1. நடுவர் நீதிமன்றத்தில் ஆவணங்களை சிபிசிஐடி தாக்கல் செய்துள்ளது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த சிபிசிஐடி ஐஜி சங்கர், விசாரணைக்கு பிறகே போலீசார் மீது கொலை வழக்கு பதியப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.