விவசாயிகள் திட்ட முறைகேட்டை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்! – காங்கிரஸ் வலியுறுத்தல்

 

விவசாயிகள் திட்ட முறைகேட்டை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்! – காங்கிரஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் பிரதம மந்தியின் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் கீழ் ரூ.110 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
விவசாயிகளுக்கு பிரதமரின் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6000ம் வழங்கப்படுகிறது. ரூ.2000ம் வீதம் மூன்று தவணையாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.6000ம் செலுத்தப்பட்டு வருகிறது. இதில், தமிழகத்தில் போலியான பெயர்களில் 110 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது

விவசாயிகள் திட்ட முறைகேட்டை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்! – காங்கிரஸ் வலியுறுத்தல்


மத்திய அரசு திட்டத்தில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பின்றி இவ்வளவு பெரிய முறைகேடு செய்ய முடியாது. இதில் முன்னணி அரசியல் கட்சிக்கும் தொடர்பு உள்ளது என்ற குற்றச்சாட்டு உள்ளது. மத்திய அரசுத் திட்டங்கள் பற்றி வாய்கிழியப் பேசும் தமிழக பா.ஜ.க, பிரதமரின் பெயரில் நடைபெறும் திட்டத்தில் இவ்வளவு பெரிய முறைகேடு நடந்தும் பெரிய அளவில் கண்டனத்தைப் பதிவு செய்யவில்லை. இதுவும் சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது.

விவசாயிகள் திட்ட முறைகேட்டை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்! – காங்கிரஸ் வலியுறுத்தல்


இந்த விவகாரம் முறைகேடாக டெபாசிட் செய்யப்பட்ட பணத்தைக் கைப்பற்றும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. மேலும், தொடர்பாக 80 பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு, அதிகாரிகள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது எல்லாம் போதுமானதாக இருக்காது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
இந்த நிலையில் இந்த மோசடி பற்றி சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த ஊழலைப் பொறுத்தவரை ஆளுங்கட்சியைச் சேர்ந்த உயர்மட்ட தலைவர்களுக்குத் தொடர்பு இருப்பதை மறுக்க முடியாது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான எடப்பாடியில் மட்டும் 11 ஆயிரம் போலிப் பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதில் அதிமுகவினர் சம்பந்தப்பட நிறைய வாய்ப்பு இருக்கிறது. வருவாய்த்துறை, விவசாயத்துறை மற்றும் வங்கி அதிகாரிகள் கூட்டு இல்லாமல் இவ்வளவு பெரிய ஊழல் நடைபெற வாய்ப்பு இல்லை.

விவசாயிகள் திட்ட முறைகேட்டை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்! – காங்கிரஸ் வலியுறுத்தல்


இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை தொடங்கியிருக்கிறார்கள். இந்த விசாரணையின் மூலம் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்களா? மோசடி செய்யப்பட்ட பணம் திரும்பப் பெற முடியுமா? என்பதெல்லாம் மிகப்பெரிய கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்காமல், மத்திய புலனாய்வுத்துறை விசாரிப்பது ஒன்றே குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு உதவியாக இருக்கும். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே தாமாக முன்வந்து சி.பி.ஐ விசாரணைக்குப் பரிந்துரைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.