கன்னியாகுமரி காசி விவகாரத்தை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்! – மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

 

கன்னியாகுமரி காசி விவகாரத்தை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்! – மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரியில் பல பெண்களை ஏமாற்றி மிரட்டி பணம் சம்பாதித்த காசி வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று ஜனநாய மாதர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை அழைத்துச் சென்று மிரட்டி, அடித்து வீடியோ எடுத்து பிளாக்மெயில் செய்தது போன்று கன்னியாகுமரி மாவட்டத்திலும் நடந்தது. இது தொடர்பாக காசி என்பவனை போலீசார் கைது செய்தனர். பிரபலங்கள் முதல் கல்லூரி மாணவிகள் வரை இவன் வலையில் பல பெண்கள் விழுந்து தங்கள் வாழ்வைத் தொலைத்ததாக செய்திகள் வெளியாகியது.

கன்னியாகுமரி காசி விவகாரத்தை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்! – மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மேலும், போலீஸ் குடும்பங்களுக்குள்ளே இவன் கைவரிசை காட்டியதும், இவனைப் பற்றி போலீசாருக்கு முன்கூட்டியே தெரிந்தும், அவனைத் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்காமல், அவனுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் செய்திகள் வெளியாகின.
சென்னை பெண் மருத்துவர் உள்ளிட்ட ஐந்து பெண்கள் அளித்த புகார் அடிப்படையில் காசி தற்போது சிறையில் உள்ளான். நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தபோதும் கூட கொஞ்சம் கூட வெட்கம், பயம் இன்றி கைகளால் இதயத்தை வடிவமைத்து போஸ் கொடுத்தான். போலீசாருக்கும் காசிக்கும் தொடர்பு உள்ளதால் இந்த வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெறாது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி காசி விவகாரத்தை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்! – மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றக் கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஜனநாயக மாதர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.
போராட்டம் குறித்து ஜனநாய மாதர் சங்கத்தினர் கூறுகையில், “ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டி பணம் பறித்த காசிக்கும் போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆதரவு உள்ளது. இதனால், இந்த வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க வேண்டும். குற்றம் செய்த அனைவரையும் கைது செய்ய வேண்டும்” என்றனர்.