kaappan-mobile kaappan-large
  • September
    17
    Tuesday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் வீட்டில் சிபிஐ சோதனை

gutkha
gutkha
Loading...

சென்னை: குட்கா வழக்கு தொடர்பாக சென்னை மற்றும் தஞ்சாவூரில் 3 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய காவல்துறை உயரதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் லஞ்சம் பெற்றதாக கூறப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவ் உள்பட 6 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், சிபிஐ அதிகாரிகள் அனுப்பிய சம்மனின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதவியாளர் சரவணன் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். 

இதன் தொடர்ச்சியாக, விஜயபாஸ்கரின் உதவியாளர் சீனிவாசன், வழக்கறிஞர் வேலு கார்த்திக் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சென்னையில் சீனிவாசனுக்குச் சொந்தமான 2 இடங்கள், தஞ்சையில் வழக்கறிஞர் வேலு கார்த்திக்குக்கு சொந்தமான ஒரு இடம் என மொத்தம் 3 இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நடந்த விசாரணையில், அவர் அளித்த தகவலின் பேரிலேயே இந்த சோதனை நடத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2018 TopTamilNews. All rights reserved.