‘சிந்திய ரத்தத்தை துடைக்கச் சொல்லி துன்புறுத்தல்’- சாத்தான்குள வழக்கின் சிபிஐ குற்றப்பத்திரிகை

‘சிந்திய ரத்தத்தை துடைக்கச் சொல்லி துன்புறுத்தல்’- சாத்தான்குள வழக்கின் சிபிஐ குற்றப்பத்திரிகை

சாத்தான்குள காவல்நிலையத்தில் இருந்து ரத்தக்கறைகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸிம் டி.என்.ஏவுடன் ஒத்துப்போவதாக சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவலர்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட விவகாரம் பூதாகரமாக உருவெடுத்தது. இந்த வழக்கில் சிக்கிய 9 காவலர்கள் சிறையில் இருக்கும் நிலையில், வழக்கு விசாரணை சிபிஐ வசம் மாறியது. சிபிஐ விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், சாத்தான்குள வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகையில் வெளிவராத பல தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘சிந்திய ரத்தத்தை துடைக்கச் சொல்லி துன்புறுத்தல்’- சாத்தான்குள வழக்கின் சிபிஐ குற்றப்பத்திரிகை

அதாவது, சாத்தான்குள காவல் நிலையம், லத்தி உள்ளிட்ட இடங்களில் இருந்து ரத்தக்கறைகள் ஜெயராஜ் பென்னிக்ஸ் டி.என்.ஏவுடன் ஒத்துப்போகிறது என்றும் அவர்கள் சிந்திய ரத்தத்தை அவர்களையே துடைக்கச் சொல்லி துன்புறுத்தப்பட்டதாகவும் அதிக ரத்தக்கசிவு இருந்ததால் இரண்டு முறை உடை மாற்றப்பட்டுள்ளது என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.

‘சிந்திய ரத்தத்தை துடைக்கச் சொல்லி துன்புறுத்தல்’- சாத்தான்குள வழக்கின் சிபிஐ குற்றப்பத்திரிகை

மேலும், அவர்களுக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் இருப்பதை குறிப்பிடாமல் சிறையில் இருக்க தகுதி என மருத்துவர் வெண்ணிலா அலட்சியமாக சான்று அளித்ததாகவும் சிறையில் அடைக்கும் போதே அவர்களின் உடல்களில் காயங்கள் இருந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், சிறையில் இருக்கும் காவலர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.