‘அவங்களுக்கு ஜாமீன் கொடுக்காதீங்க’.. கைதான காவலர்களுக்கு ஜாமீன் கொடுக்க சிபிஐ எதிர்ப்பு!

 

‘அவங்களுக்கு ஜாமீன் கொடுக்காதீங்க’.. கைதான காவலர்களுக்கு ஜாமீன் கொடுக்க சிபிஐ எதிர்ப்பு!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கு நேரத்தில் கடையை திறந்து வைத்திருந்ததாக தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவலர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் பூதாகரமாக உருவெடுத்ததை தொடர்ந்து, இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். முதலில் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்த இந்த வழக்கு, தமிழக அரசின் கோரிக்கைக்கு இணங்க சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

‘அவங்களுக்கு ஜாமீன் கொடுக்காதீங்க’.. கைதான காவலர்களுக்கு ஜாமீன் கொடுக்க சிபிஐ எதிர்ப்பு!

இங்கு தான் இந்த வழக்கில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது. தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட இந்த வழக்கு விசாரணை விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், டெல்லியில் இருந்து இந்த வழக்கை விசாரிக்க வந்த சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா உறுதியானது. அதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட காவலர்கள் பால்துரைக்கும் முத்துராஜுக்கும் தொற்று பரவியது. கொரோனாவால் தாக்கப்பட்ட காவலர் பால்துரை கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார். இவ்வாறு இந்த வழக்கில் பெரும் சிக்கல்கள் நீடித்து வந்ததால், வழக்கு விசாரணை கிடப்பில் இருந்த நிலையில் தற்போது விசாரணை மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த வழக்கில் கைதான காவலர்கள் தாமஸ் பிரான்சிஸ் மற்றும் முத்துராஜ் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவலர்களுக்கு ஜாமீன் கொடுக்க சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஜாமீன் மனு குறித்து சிபிஐ பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.