‘மாஸ்டர்’ படத்தால் சிபிசிஐடியிடம் சிக்கிய தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ

 

‘மாஸ்டர்’ படத்தால் சிபிசிஐடியிடம்  சிக்கிய தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ

மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த மாதம் 13 ஆம் தேதி வெளியானது. கொரோனா காரணமாக தியேட்டரில் படம் வெளியாகுமா என்று மிகப்பெரிய கேள்வி எழுந்த நிலையில். தமிழ் சினிமாவுக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.

‘மாஸ்டர்’ படத்தால் சிபிசிஐடியிடம்  சிக்கிய தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ

இந்த சூழலில் கடந்த ஆண்டு கொரோனாவுக்கு முன்பே மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த இசை வெளியீட்டு விழாவில், மும்பை நோவெக்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் காப்புரிமை பெற்ற சில தமிழ் பாடல்களை பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து தயாரிப்பாள சேவியர் பிரிட்டோ மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி சிபிசிஐடி போலீசாரிடம் அந்த நிறுவனம் புகார் அளித்தது.

‘மாஸ்டர்’ படத்தால் சிபிசிஐடியிடம்  சிக்கிய தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ

இந்நிலையில் மும்பை நோவெக்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து விரைவில் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவுக்கு சம்மன் அளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.