காவல்நிலையத்தில் என்ன நடந்தது?.. சாத்தான்குள காவலர்களிடம் மீண்டும் சிபிசிடி விசாரணை!

காவல்நிலையத்தில் என்ன நடந்தது?.. சாத்தான்குள காவலர்களிடம் மீண்டும் சிபிசிடி விசாரணை!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி, விசாரணையைக் கையிலெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கைது செய்யப்பட்ட நிலையில் எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோர் மீது கொலை வழக்குப் பதியப்பட்டது.

காவல்நிலையத்தில் என்ன நடந்தது?.. சாத்தான்குள காவலர்களிடம் மீண்டும் சிபிசிடி விசாரணை!

இதனையடுத்து இந்த இரட்டை கொலை வழக்கு வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்கள் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டதன் பேரில், சம்பந்தப்பட்ட சிறையில் அவர்களுக்குப் பாதுகாப்பு பிரச்சனை எழும் என்பதால் சிறைத்துறை நிர்வாகம் அவர்களை மதுரை மத்திய சிறைச்சாலைக்கு மாற்றம் செய்தது.

காவல்நிலையத்தில் என்ன நடந்தது?.. சாத்தான்குள காவலர்களிடம் மீண்டும் சிபிசிடி விசாரணை!

இந்த வழக்கில் என்ன நடந்தது என்பது குறித்து துல்லியமாகக் கண்டறிய சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தற்போது, சாத்தான்குள காவல் நிலையத்தில் பணியாற்றிய எழுத்தர் பியூலா, காவலர் தாமஸ் உள்ளிட்ட 5 பேரிடமும், பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பைச் சேர்ந்த ராஜா மற்றும் இசக்கித்துரை ஆகிய இரண்டு பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இரட்டைக்கொலை சம்பவத்தால் சமீபத்தில் சாத்தான்குள காவலர்கள் 27 பேர் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.