காவிரி உரிமை மீட்பு குழுவினர் மூன்று புதிய வேளாண் சட்ட நகல்களை எரித்து போராட்டம்

காவிரி உரிமை மீட்பு குழுவினர் மூன்று புதிய வேளாண் சட்ட நகல்களை எரித்து போராட்டம்

மத்திய அரசு புதிதாக கொண்டுவந்திருக்கும் மூன்று வேளாண் சட்டங்களை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் காவிரி உரிமைக்குழு சார்பில் இன்று சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைப்பெற்றது.

காவிரி உரிமை மீட்பு குழுவினர் மூன்று புதிய வேளாண் சட்ட நகல்களை எரித்து போராட்டம்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் 100க்கும் அதிகமான விவசாயிகள் & காவிரி உரிமை மீட்பு குழுவை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு மத்திய , மாநில அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

காவிரி உரிமை மீட்பு குழுவினர் மூன்று புதிய வேளாண் சட்ட நகல்களை எரித்து போராட்டம்

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் இந்த சட்ட மசோதா விவசாயிகளை அடியோடு அழிக்கும் திட்டம் என்று முழக்கமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் காவல்துறைக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோல் பாலக்கரை பகுதியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி உரிமை மீட்பு குழுவினர் மூன்று புதிய வேளாண் சட்ட நகல்களை எரித்து போராட்டம்

ஆர்ப்பாட்டத்தின்போது , காவிரி உரிமை மீட்பு குழுவினர் சார்பாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய மா.பா சின்னதுரை, மத்திய நரேந்திர மோடி அரசு விவசாயிகளை முழுவதுமாக அளிக்க இந்த மூன்று சட்ட மசோதாக்களை நிறைவேற்றி சதித் திட்டம் போட்டு வருகிறது.மாநில எடப்பாடி அரசு இந்த சட்ட மசோதாவினால் பாலாறும் தேனாறும் தமிழகத்தில் ஓடும் என்று அதற்கு புகழாரம் சூட்டுகிறது – ஆனால் இது முழுவதும் விவசாயிகளுக்கு எதிரானது என்பதனை யாரும் புரிந்துகொள்வதில்லை என்றார்.

காவிரி உரிமை மீட்பு குழுவினர் மூன்று புதிய வேளாண் சட்ட நகல்களை எரித்து போராட்டம்