காவிரி: கர்நாடக அணைகள் நிரம்பின… மேட்டூரிலிருந்து 13,500 அடி தண்ணீர் திறக்கப்படுகிறது!

காவிரி: கர்நாடக அணைகள் நிரம்பின… மேட்டூரிலிருந்து 13,500 அடி தண்ணீர் திறக்கப்படுகிறது!

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடாகாவில் கட்டப்பட்ட அனைத்து அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைகளில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

காவிரி: கர்நாடக அணைகள் நிரம்பின… மேட்டூரிலிருந்து 13,500 அடி தண்ணீர் திறக்கப்படுகிறது!

மேட்டூர் அணையில் இருந்து குறுவை பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு 13,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால், தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரித்தது. இதன் காரணமாக தமிழகத்தில் காவிரி பாயும் கரையோரங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை வெளியிடப்பட்டது.

காவிரி: கர்நாடக அணைகள் நிரம்பின… மேட்டூரிலிருந்து 13,500 அடி தண்ணீர் திறக்கப்படுகிறது!
மழை சற்று குறைந்த நிலையில் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டன. இந்த நிலையில் அங்கு தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய நான்கு அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
கபினி அணைக்கு நீர் வரத்து நொடிக்கு 22,912 அடி என்ற அளவில் இருந்தது. இதைத் தொடர்ந்து 24,063 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர் வரத்து 18,027 கன அடியாக உள்ளது. அங்கிருந்து 16,930 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

காவிரி: கர்நாடக அணைகள் நிரம்பின… மேட்டூரிலிருந்து 13,500 அடி தண்ணீர் திறக்கப்படுகிறது!
கர்நாடக அணைகள் நிரம்பியுள்ளதால் அம்மாநில விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே நேரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அதிக அளவில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் நிலை உள்ளது. இதனால் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதனால், காவிரி டெல்டா பாசன விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு 13,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.