darbar
  • January
    20
    Monday

Main Area

Mainகாவிரி 736; இரண்டாயிரமாண்டு காவிரி சரித்திரம்-அத்தியாயம்-4


மண்ணைப் பொன் கொழிக்கச் செய்யும் பொன்னி எனும் காவிரி ஆறு இன்று கிட்டத்தட்ட கைவிடப்பட்டுவிட்டது. இதற்கான காரணங்களோடு காவிரிக்கரை மனிதர்களின் கதைகளையும் சுமார் 736 கி.மீ தூரம் பயணித்து தேடி கோர்க்கிறது காவிரி எனும் இந்த சரடு. கைவிடப்பட்ட காவிரியின் வரலாறை ஆவணப்படுத்தும் முயற்சியாக டாப் தமிழ் நியூஸ் செய்தி நிறுவனம் "காவிரியின் இரண்டாயிரமாண்டு சரித்திரம்" என்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படமானது பல்வேறு அத்தியாயங்களாக வெளியாகி வருகிறது.

 

அத்தியாயம் - 4

திருவெண்காட்டில் பிறந்த பட்டினத்தார், திருவெற்றியூரில் ஜீவசமாதி ஆனது எப்படி?

திருவெண்காட்டிற்கு தெற்கே 4 கீ.மீ தொலைவில் இருக்கிறது காவிரிப்பூம்பட்டினத்து திருப்பல்லவனீச்சரம். இது மேலையூர் என்று தற்போது அழைக்கப்படுகிறது. கோவில் 52 சென்ட் பரப்பளவில் 5 நிலை ராஜகோபுரத்துடன் அமைந்திருக்கிறது.

மூலவர் சுயம்பு லிங்கமாக அருள்மிகு பல்லவனேஸ்வரர் என்று வழங்கப்படுகிறார். அம்மன் சௌவுந்திர நாயகி தல விருட்சம் முல்லை. தீர்த்தம் ஜானவி சங்கமம். கோவில் கிழக்கு நோக்கியது கோவிலுக்கு முன்னாள் ஜானவி தீர்த்தம் உள்ளது. உள்பிரகாரத்தில் பட்டினத்தார், அவரது தாயார் ஞானகலாம்பிகை, மனைவி சிவகலை, பெருமானே வந்து பிள்ளையாய் பிறந்த மருதவாணர் , அவரது வளர்ப்பு பெற்றோர் சிவசருமர், சுசீலை, சேத்தனூர் பத்திரக்கிளியார் மற்றும் உற்சவ விக்கிரகங்கள் உள்ளன. பல்லவர்கள் வழிபட்டத்தாலையே பல்லவனீச்சரம் எனப் பெயர் பெற்ற இந்த கோவிலில் காலவ முனிவரும் பூசித்துப் பேரு பெற்றார்.

தீச்சை பெற்று சிவபூஜை செய்துவந்த பக்தர் திருவெண்காடார், தனது 16 வயதில் சிவகலை என்கிற பெண்ணை மணந்தார். பிள்ளை வரம் வேண்டி திருவிடைமருதூர் மகாலிங்க பெருமானை வழிபட, பெருமானே பிள்ளையாக பிறந்து மருதவாணர் என்ற பெயருடன் வளர்ந்து திருவெண்காடரை மகிழ்வித்தார்.

தக்க வயது வந்ததும் மருதவாணர் கப்பலில் சென்று வாணிபம் செய்து வந்தார். அப்படி ஒரு முறை வாணிபம் செய்யப்போன மருதவாணர், கப்பல் நிறைய வரட்டிகளையும், தவிட்டையும் கொண்டு வந்து இறக்குகிறார். அதைப்பார்த்த திருவெண்காடார் வருத்தப்படுகிறார். மருதவாணரோ தன தாயிடம் ஒரு சிறிய பேழையைக் கொடுத்துவிட்டு மறைகிறார்.

மகனை காணாது தவித்த தம்பதியர், மருதவாணர் கொடுத்த பேழையைத் திறந்து பார்க்கிறார்கள். அதில் சிறிய ஓலை ஒன்றும், காதறுந்த ஊசியும் இருந்தன.அந்த ஓலையில்...'காதறுந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே' என்று எழுதப்பட்டிருந்தது.

உயிர் பிரிந்து காட்டிற்கு பிணமாக போகும்போது ஒரு காதறுந்த ஊசிகூட கூடவராதே... ஏன் இத்தனை செல்வம்? என்ற அந்தக் கேள்விதான் திருவெண்காடர் என்றே பெரும் செல்வந்தரை முற்றும் துறந்தவராக்குகிறது. அன்றே செலவச் செழிப்பான வாழ்வை உதறிவிட்டு, கோவணத்துடன் கோவில் வாசலில் படுத்து விடுகிறார். இவரது சகோதரிக்கு இது அவமானம் ஆகிவிடுகிறது. அண்ணனை அழைத்து வந்து அவருக்குப் பிடித்த ஆப்பம் செய்து படைக்கிறாள். அதில் விஷம் கலந்திருப்பது பட்டினத்தடிகளுக்கு தெரிந்து விடுகிறது.

'தன்வினை தன்னைச்சுடும் ஒட்டப்பம் வீட்டைச் சுடும் ' என்று சொல்லி அந்த அப்பத்தை தங்கை வீட்டுக் கூரைமீது எறிய., கூரை தீப்பிடித்து எரிகிறது. அதோடு வீட்டைவிட்டுக் கிளம்பி தேசாந்திரி ஆகிறார் பட்டினத்தார். பட்டினத்தார் போகும்போது தன் தாயிடம் உனக்கு கொள்ளி வைக்க மட்டுமே இனி வருவேன் என்று சொல்லிப் போனபடியே...தாயாரின் மரணச்செய்தி அறிந்து ஊருக்கு வருகிறார்.

வாழை மட்டைகளை அடுக்கி அதன்மீது தாயாரின் உடலை வைக்கிறார். 'அய்யிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்று..' என்ற பாடலை பாடத் தொடங்குகிறார்.

'முகம் மேல் முகம் வைத்து முத்தாடி என்றன் மகனே என அழைத்த வாய்க்கு.. முன்னை இட்ட தீ முப்புறத்திலே.. பின்னை இட்ட தீ தென் இலங்கையிலே, அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே... யானும் இட்ட தீ மூழ்க மூழ்கவே' என்று பாட பச்சை வாழை மட்டைகள் பற்றி எறிகிறது.

அதன் பிறகு, அவருக்கு இறைவன் கொடுத்த கரும்பை அதன் நுணி இனிக்கும் வரை தூக்கிக் கொண்டு அலைந்து, சென்னை திருவெற்றியூர் வந்து சிவ சமாதி கூடினார். தேவாரா பதிகம் பெற்ற காவிரி வடகரை தளங்களில் இது பத்தாவது தளம்.

'பரசுபானியர் , பாடல் வீனையர், பட்டினத்துறை பல்லவனீஸ்வரத்தரசு பேணி நின்றார் இவர்தம்மை அறிவார் யார் ' என்று திருஞானசம்பந்தர் பாடியது இந்தக் கோவில் பற்றித்தான். ஐந்து கால பூஜை நடைபெறுகிறது. ஆடி மாதத்தில் பட்டினத்தார் திருவிழா வருடந்தோறும் நடைபெறுகிறது.

தொடரும்...

திசை மாறிய காவிரி!! எழுத்தாளர் கல்கியின் பார்வையில்...

2018 TopTamilNews. All rights reserved.