கங்கைக்கு பாவ விமோசனம் தந்த காவிரி!

 

கங்கைக்கு பாவ விமோசனம் தந்த காவிரி!

கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற புண்ணிய நதிகளில் மக்கள் நீராடி தங்களின் பாவங்களைப் போக்கிக் கொள்பவர்களின் எண்ணிக்கை ஏராளம். அப்படி நீர் நிலைகளில் வந்து நீராடுபவர்களை புனிதப்படுத்தி விட்டு, அவர்களின் பாவங்களை ஏற்றுக் கொள்கின்றன நதிகள்.

கங்கைக்கு பாவ விமோசனம் தந்த காவிரி!

அப்படி பாவங்களால் மாசுபடும் இந்த நதிகள் ஒவ்வொரு ஆண்டும் துலா மாதம் என்னும் ஐப்பசியில் மயிலாடுதுறை துலாக் கட்ட காவிரியில் நீராடி தங்களிடம் உள்ள பாவங்களைப் போக்கிக் கொள்வதோடு, தங்களை மென்மேலும் புனிதப்படுத்திக் கொள்வதாக ஐதீகம்

மூன்று நதிகள் தவிர, சப்த கன்னியரும் கூட ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறை துலாக் கட்டத்தில் நீராடுவதாக சொல்லப்படுகிறது. எனவே, ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது சிறப்பான ஒன்றாக கருதுகிறார்கள்.

கங்கைக்கு பாவ விமோசனம் தந்த காவிரி!

ஐப்பசி மாதம் முழுவதும் நீராட முடியாதவர்கள், ‘கடை முழுக்கு’ என்று சொல்லப்படும், ஐப்பசி மாத கடைசி நாள் அன்று மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நீராடி,மயிலாடுதுறை அபயாம்பிகை சமேத மயூரநாதர் மற்றும் அருகில் உள்ள கருங்குயில்நாதன் பேட்டை ஆனந்தவல்லி சமேத சக்தி புரீஸ்வரர் ஆகியோரை வழிபட்டு வந்தால் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

காவிரி நதி ஒரு புண்ணிய நதியாகும். இதில் நீராடினால் அனைத்து பாவங்களும் போகும். புராணத்தில் ஒரு கதை உண்டு. மக்களின் பாவங்களை போக்க கங்கையில் நீராடி நீராடி கங்கைக்கே பாவங்கள் அதிகமாக சேர்ந்து தோஷம் ஏற்பட்டதாம். தன் பாவங்களை போக்க என்ன செய்ய வேண்டும் என்று காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவிடம் கேட்டாளாம் கங்கை. புனித நீரான காவிரியில் நீராடினால் உன் பாவங்கள் அனைத்தும் தீரும் என்றாராம்.
அன்ய க்ஷேத்ரே க்ருதம் பாபம் புண்யக்ஷேத்ரே விநச்யதி
புண்ய க்ஷேத்ரே கிருதம் பாபம் வாரனாச்யாம் விநச்யதி
வாரனாச்யாம் க்ருதம் பாபம் கும்பகோனே விநச்யதி
கும்பகோனே க்ருதம் பாபம் காவேரி ஸ்நானே விநச்யதி

கங்கைக்கு பாவ விமோசனம் தந்த காவிரி!

என்று காவேரியில் நீராடுவதை வேதங்கள் போற்றுகின்றன. அதன்படியே, ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் அமாவாசையில் கங்காதேவி காவிரியில் நீராடி மக்கள் தன்னிடம் கரைத்த பாவங்களைப் போக்கி கொள்கிறாள் என்று புராணங்களில் போற்றப்படுகிறது. இவ்வளவு சிறப்புமிக்க காவிரியில் நீராடி நாம் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களை போக்கிக் கொள்வோம்.

-வித்யா ராஜா