இந்தியாவில் பரவும் புதிய வைரஸ்! அதிர்ச்சியில் ஆய்வாளர்கள்…

 

இந்தியாவில் பரவும் புதிய வைரஸ்! அதிர்ச்சியில் ஆய்வாளர்கள்…

கொரோனாவின் ஆபத்தே இன்னும் முடியவில்லை. சொல்லப்போனால், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உச்சத்தில் இருக்கிறது. இந்நிலையில் கேட் கியூ வைரஸ் என்ற புதிய வைரஸ் இந்தியாவில் பரவிவருவதாக ஐசிஎம்ஆரின் வைராலஜி ஆய்வகம் தெரிவித்துள்ளது.

சென்ற ஆண்டு டிசம்பர் சீனாவின் வூகான் நகரில் தொடங்கியது கொரோனா ஆபத்து. அங்கிருந்து உலகம் முழுவதும் அதிவிரைவில் பரவியது. இந்தியாவில் மார்ச் மாதத்தில் இதன் தாக்கம் தெரிந்தது. அம்மாத இறுதியில் லாக்டெளன் அறிவிக்கப்பட்டாலும் புதிய நோய்த் தொற்று குறையவில்லை. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 32 லட்சம் பேர், கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 30 லட்சத்தும் பேர், கொரோனாவால் உயிரிழந்தோர் சுமார் 1 லட்சம்.

இந்தியாவில் பரவும் புதிய வைரஸ்! அதிர்ச்சியில் ஆய்வாளர்கள்…
கொரோனா வைரஸ்

இந்த சூழலில் இந்தியாவில் புதிய வைரஸ் ஒன்று பரவிவருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதுமிலிருந்து பெறப்பட்ட 833 ரத்த மாதிரிகளில் கர்நாடகாவை சேர்ந்த இருவரின் ரத்தத்தில் இந்த வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த வைரஸ் சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளிலேயே பெருமளவு காணப்படுவதாக சொல்லப்படுகிறது. பன்றி, மைனா ஆகியவற்றிலிருந்து இந்த வைரஸ் பரவலாம் எனக் கூறப்படுகிறது, இந்த வைரஸும் கொரோனாவை போன்று பொது சமூக தொற்றாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும், 3 விதமான கொசுக்கள் மூலம் மனிதர்களுக்கு பரவ வாய்ப்புள்ளதாகவும் ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது.