ஆர்.கே.நகரில் பணம் பட்டுவாடா.. போட்டுடைத்த திமுக சேகர் பாபு

 

ஆர்.கே.நகரில் பணம் பட்டுவாடா.. போட்டுடைத்த திமுக சேகர் பாபு

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தினத்தன்றே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டன. அவை முறையாக கண்காணிக்கப்படுகிறதா? என பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சில இடங்களில் வாக்காளர்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சில இடங்களில் கோடிக் கணக்கில் பணமும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

ஆர்.கே.நகரில் பணம் பட்டுவாடா.. போட்டுடைத்த திமுக சேகர் பாபு

இந்த நிலையில், ஆர்.கே.நகரில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக திமுகவின் துறைமுகம் தொகுதி வேட்பாளர் சேகர் பாபு புகாரளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்று முதல் தபால் வாக்கு திரும்பப் பெறும் பணிகள் தொடங்கியிருக்கிறது. இது தொடர்பாக சென்னை தேர்தல் அதிகாரி பிரகாஷ் அரசியல் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். அக்கூட்டத்தில் திமுக சார்பில் சேகர் பாபு கலந்து கொண்டார்.

ஆர்.கே.நகரில் பணம் பட்டுவாடா.. போட்டுடைத்த திமுக சேகர் பாபு

கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சேகர் பாபு, ஆர்.கே.நகரில் டோக்கன் மூலம் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. இது குறித்து தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்திருக்கிறோம் என்று கூறினார். மேலும், துறைமுகம் தொகுதியில் ஆர்.எஸ்.எஸ் நபர்கள் இருப்பதாக புகாரளித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2017ம் ஆண்டு இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன், டோக்கன் மூலம் பணப்பட்டுவாடா செய்து வெற்றி பெற்றதாக இன்றளவும் பேசப்படுகிறது. இந்த சூழலில் அங்கு மீண்டும் பணப்பட்டுவாடா நடப்பதாக திமுக புகார் அளித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.