அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து!

 

அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து!

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஊதிய உயர்வு, பணி நியமனம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்கள் அவ்வப்போது போராட்டம் நடத்துவதும், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து போராட்டத்தை அரசு தடுத்து நிறுத்துவதும் வாடிக்கையான ஒன்று தான். பெரும்பாலான நேரங்களில் அவர்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கும் அரசு, பேச்சுவார்த்தைகளை மீறி போராட்டத்தை தொடர்ந்தால் அரசின் ஊழியர்கள் என்றும் பாராமல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்.

அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து!

அவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக தற்போது முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். நிலுவையிலுள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தையும் ‘மறப்போம் மன்னிப்போம்’ என்ற உயரிய கருத்தை மனதில் கொண்டு, ரத்து செய்வதாகவும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு புறம் தள்ளியது இல்லை என்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அரசின் இந்த முடிவை ஏற்று அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் கல்விப் பணியை தொடர வேண்டுமென கோரியுள்ளார்.